For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நொந்து நூடுல்ஸாகும் மேகி.. அதிகளவு சாம்பல் இருப்பதாக நெஸ்ட்லேவுக்கு ரூ.45 லட்சம் அபராதம்!

மேகி நூடுல்ஸில் அதிகளவு சாம்பல் இருந்ததால் நெஸ்ட்லே நிறுவனத்துக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் 45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

ஷாஜஹான்பூர்: மேகி நூடுல்ஸில் அதிகளவு சாம்பல் இருந்ததால் நெஸ்ட்லே நிறுவனத்துக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றம் 45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு கலந்திருப்பதாக கடந்த 2015ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் 2015ம் ஆண்டு மேகி நூடுல்ஸ்க்கு நாடு முழுவதும் தடை விதித்தது. பின்னர் நடைபெற்ற சோதனையின் அடிப்பைடயில் தடை விலக்கப்பட்டு மீண்டும் சந்தையில் அனுமதிக்கப்பட்டது.

2016ல் வந்த முடிவு

2016ல் வந்த முடிவு

2015 ஆம் ஆண்டு மொத்தம் 7 மாதிரிகள் எடுக்கப்பட்டு லகனோ பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் 2016 ஆம் ஆண்டு வந்தது.

மொத்தம் ரூ. 62 லட்சம் அபராதம்

மொத்தம் ரூ. 62 லட்சம் அபராதம்

இதை தொடர்பாக ஷாஜகான்பூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் நெஸ்ட்லே நிறுவனத்திற்கு ரூ.45 லட்ச ரூபாய் அபராதமும் வினியோகஸ்தருக்கு 15 லட்சம் ரூபாய் அபராதமும், விற்பனையாளர்கள் இருவருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் அபராதமும் விதித்து உள்ளது.

மேல்முறையீடு செய்ய முடிவு

மேல்முறையீடு செய்ய முடிவு

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நெஸ்ட்லே, ஆய்வுக்கு பயன்படுத்திய மேகி நூடுல்ஸ் 2015ம் ஆண்டுக்கு முன்பு உள்ளது என்றது. மேலும் ஆய்வக முடிவு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறி உள்ளது.

நூடுல்ஸில் அதிக சாம்பல்

நூடுல்ஸில் அதிக சாம்பல்

மேகி நூடுல்ஸ் மாதிரிகளில் அனுமதிக்கப்படும் வரம்பை விட அதிகளவு சாம்பல் இருந்ததாக ஆய்வக அறிக்கையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Maggi Noodles again facing problem. The ash contant is more in the Noodle UP court imposed Rs.45 lakhs penalty for Netle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X