For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உப்பு ஜாஸ்தி.. உத்தரபிரதேசத்தில் மேகி பாக்கெட்டுகள் "ரிட்டர்ன்"!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் அனைத்து கடைகளில் இருந்தும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெறுமாறு, நெஸ்ட்லே நிறுவனத்திற்கு, உணவு இன்ஸ்பெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேகி நூடுல்சில், அளவுக்கு அதிகமான உப்பு கலக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகளுகளின் வளர்ச்சி மற்றும் அவர்கள் திறமையை பாதிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Maggi noodles packets recalled across Uttar Pradesh

இதையடுத்து உத்தரபிரதேச மாநில உணவு இன்ஸ்பெக்டர்கள் முன்முயற்சி எடுத்து, கடைகளிலுள்ள மேகி பாக்கெட்டுகளை திரும்ப பெற நெஸ்ட்லே நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு சோதனை நடத்தி, மேகியிலுள்ள பாதிப்புகளை கண்டுபிடித்துள்ளது.

ஆனால், நெஸ்ட்லே நிறுவனம், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. நாங்கள், அதுபோன்ற உப்பை பயன்படுத்துவதில்லை என்று நெஸ்ட்லே கூறியுள்ளது. இந்நிலையில், புதிதாக விற்பனைக்கு வரும் மேகி நூடுல்ஸ்களையும், தீவிர சோதனைக்கு உட்படுத்த உத்தர பிரதேச உணவு பதப்படுத்துதல் துறை முடிவு செய்துள்ளது.

English summary
Food inspectors have ordered Nestle India to recall a batch of Maggi noodles from shops across Uttar Pradesh, saying the product contained dangerous levels of lead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X