For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகி நூடுல்ஸ் விரைவில் விற்பனைக்கு வரும்.. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி : தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவுகள் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு என்று தெரிவிக்கப்படும் நிலையில், விரைவில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

மேகி நூடுல்சில் காரீயத்தின் அளவு மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளூட்டமேட் ரசாயன உப்பு அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நெஸ்லே தயாரிப்புகளில் மேகி நூடுல்ஸ் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

maggi

இந்நிலையில், மேகி நூடுல்ஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மேகி நூடுல்ஸ் சாப்பிட தகுந்த உணவுதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே விரைவில் அதன் மீதான தடை விலகும் என்று பாஸ்வான் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்தியாவில் மேகி மீது தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் மனப்போக்கு மாறிவிட்டதாகவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்ற மனநிலை வந்து விட்டதாகவும் பாஸ்வான் கூறியுள்ளார்.

எனினும், நுகர்வோரின் நலனே முக்கியம் என்றும் அதனை கருத்தில் வைத்தே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

English summary
Consumer Affairs Minister Ram Vilas Paswan on Thursday expressed confidence over Maggi making a comeback to the stores soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X