For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத், உ.பியை விட மகாராஷ்டிராவில் வேலையில்லாதவர்கள் அதிகமாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை விட மகாராஷ்டிராவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என ஐ.நா அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் 2.5 சதவீத நகர்புற இளைஞர்களுக்கு வேலையில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் மகாராஷ்டிராவில் 4.5 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் ஆய்வு

இளைஞர்களிடம் ஆய்வு

2009 - 10 ம் ஆண்டு என்எஸ்எஸ் அமைப்பு இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. 15 முதல் 32 வயதுவரை உடைய இளைஞர்கள் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

லட்சத்தீவுகள்

லட்சத்தீவுகள்

இதில் நாட்டிலேயே அதிக வேலையின்மை லச்சதீவில் நிலவுவதாகவும் மேகாலயாவில் 15.7 சதவீதம் ஆண்கள் வேலையின்றி இருப்பதாகவும், நாகாலாந்தில் 11.2 சதவீதம் ஆண்களும் 13.9 சதவீதம் பெண்களும் வேலையின்றி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களை விட மகாராஷ்டிராவில்தான் வேலையின்மை அதிகம் நிலவுகிறதாம்.

பெண்கள்

பெண்கள்

ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களைப் பொருத்தவரை டெல்லியில் 0.9 % உ.பியில் 2.2% மத்திய பிரதேசத்தில் 2.3 பேர் வேலையில்லாதவர்களாக இருக்கின்றனர்.

வாரக்கூலி

வாரக்கூலி

மகாராஷ்டிராவில் தொழிலாளர்களுக்கு வாரக்கூலியாக ரூ.900 முதல் 2,600 வரை கொடுக்கப்படுகிறது. குஜராத்தில் ரூ.775 முதல் ரு.1400 வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. டெல்லி இளைஞர் ஒருவர் வாரத்திற்கு ரூ. 1200 சம்பாதிக்கிறார்.

ஹரியானாவில் அதிகம்

ஹரியானாவில் அதிகம்

ஹரியானா இளைஞர்தான் அதிக அளவாக வாரத்திற்கு ரூ.4000 வரை கூலி பெறுகிறாராம். நாடுமுழுவதும் சராசரியாக ரூ.770 முதல் ரூ.2500 வரை வாரக்கூலியாக பெறுகின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

English summary
Unemployment in Maharashtra is almost double that of Gujarat. As against the 2.5% urban young men unemployed in Gujarat, 4.5% in Maharashtra are jobless.The study is based on NSS 66 round of data (2009-10) of urban youth between the ages of 15 and 32.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X