For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சி அமைக்க மேலும் 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கை நிராகரிப்பு- ஆளுநர் அறிவிப்பால் பரபரப்பு!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா கட்சி இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sources says that Uddhav Thackeray will be CM of Maharastra

    மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க சிவசேனா 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் கோஷ்யாரி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர அரசியலில் நொடிக்கு நொடி திருப்பங்களும், அதிரடிகளும் நிகழ்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்தார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்தார்.

    பாஜகவிற்குத்தான் முதலில் அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் சிவசேனா பாஜகவுடன் சேராமல் முரண்டு பிடித்து வந்தது. தங்களுக்கு உறுதியாக முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனா ஒற்றைக்காலில் நின்றது.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    இதற்கு பாஜகவும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில் எங்களுக்கு சிவசேனா ஆதரவு இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை, என்று பாஜக கூறிவிட்டது. இதனால் சிவசேனாவிற்கு ஆளுனர் அழைப்பு விடுத்தார். சிவசேனாவிற்கு இன்று இரவு 7.30 மணி வரை நேரம் கொடுக்கப்பட்டது.

    ஆலோசனை செய்தது

    ஆலோசனை செய்தது

    இதற்குள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைக்க சிவசேனா திட்டமிட்டு வந்தது. ஆனால் இதில் உடன்படிக்கை எட்டப்படவில்லை. இதனால் கூட்டணி குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

    ஆட்சி அமைப்பது

    ஆட்சி அமைப்பது

    இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்க சிவசேனா முடிவு செய்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளுநரை எம்எல்ஏக்கள் சந்தித்தனர். எம்எல்ஏ ஆதித்யா தாக்கரேவும் இதில் இடம்பெற்று இருந்தார்.

    அவகாசம்

    அவகாசம்

    இதில் ஆளுநர் கோஷ்யாரியிடம் மேலும் 1 நாள் அவகாசம் கேட்டனர் சிவசேனா தலைவர்கள். ஆனால் ஆளுநர் கோஷ்யாரி சிவசேனா கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே இதுகுறித்து அளித்த பேட்டியில், நேற்றுதான் எங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.ஒருநாள் மட்டுமே இதற்கு நேரம் வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறோம் என்று ஆளுநரிடம் குறிப்பிட்டோம்.

    பணிகள்

    பணிகள்

    கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டோம்.ஆனால் எங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து ஆட்சி அமைக்க எங்களால் முடிந்த பணிகளை செய்வோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆளுநர் மாளிகை அறிவிப்பு

    ஆளுநர் மாளிகை அறிவிப்பு

    ஆனால் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 3 நாட்கள் சிவசேனா அவகாசம் கேட்டது. அத்துடன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் எதையும் தரவும் இல்லை. இதனால் சிவசேனாவின் கோரிக்கி நிராகரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Maharashtra: Shiv Sena to meet the governor at 2.30 PM, May form the government today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X