For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்திஜிக்கே சத்திய சோதனையான காலம் தான் இது.. இன்னும் என்னெல்லாம்... ம.பி.யில் புது சர்ச்சை

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூட தேர்வில் மகாத்மா காந்தியை தீயவர் என மோசமாக விமர்சித்து பள்ளிக்கூட தேர்வு கேள்வியில் கேட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஜஸ்ட் பிரிண்டிங் மிஸ்டேக் பெருசு படுத்தாதிங்க.. நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என அம்மாநில அரசு சொல்லியிருக்கிறது.

மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க போராடியதற்காக இன்னும் என்னவெல்லாம் அவர் அனுபவிக்க வேண்டியதிருக்கும் என தெரியவில்லை.

காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தியாளர் என்கிறார்கள். காந்தி தான் பாகிஸ்தான் பிரிந்து போக காரணம் என்ற ரீதியிலும் அதனால் தான் அவரை கோட்சே கொன்றார் என்ற ரீதியிலும் மோசமான தவறான விமர்சனங்ளை ஒரு கூட்டம் பரப்பி வருகிறது.

காந்தி குறித்து

காந்தி குறித்து

இது ஒருபுறம் எனில் அண்மை காலமாக காந்தியை பற்றி வரலாறுகளில் பள்ளிகளில் தவறாக மாற்றுவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஒடிசாவில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அடிக்கப்பட்ட கையேட்டில் காந்தி எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவத்தால் இறந்தவிட்டதாக சொன்னார்கள்.

காந்தி இறப்பு

இதை தவறு என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்த உடன் அதை திரும்ப பெற்றது ஒடிசா மாநில அரசு. பின்னர் விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தது தனி கதை.

குடியோடு

குடியோடு

இப்போது மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு தேர்வில் காந்தியை 'குப்புதி' என குறிப்பிட்டு உள்ளார்கள். அதாவது தீயவர் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். "தீய மற்றும் பொல்லாதவர் குடியோடு காந்திஜி வாழ்க்கையை நடத்தினார்' என்று பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்த நிலையில் இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு காரணம் ஆனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தவறுதலாக வந்துவிட்டது

தவறுதலாக வந்துவிட்டது

இதையடுத்து ஆங்கில ஆசிரியர் நீலம் வசானியா இது தவறுதாக அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு பதில் 'gambling' என்று வர வேண்டிய இடத்தில் 'Gandhiji' என தவறுதலாக வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அதாவது இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துமே g என்பதால் இந்த தவறு நடந்துவிட்டதாக கூறியுள்ளார். அதாவது தீய மற்றும் பொல்லதவர் குடியோடு மற்றும் சூதாட்டத்தோடு வாழ்கையை நடத்தினார் என்று வந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

நிச்சயம் நடவடிக்கை

நிச்சயம் நடவடிக்கை

இதனிடையே மத்திய பிரதேச மாநில அமைச்சர் பிசி சர்மா இது பற்றி அளித்துள்ள விளக்கத்தில், "மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை தயாரித்த 10ம் வகுப்ப அரசு தேர்வில் மகாத்மா காந்தி குறித்து தவறுதலாக வந்துள்ளது. இந்த தவறை செய்தவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

English summary
PC Sharma, Madhya Pradesh Minister on Class 10 study material prepared by state education board depicts Mahatma Gandhi negatively: Action will be take against the person who committed this mistake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X