For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுபான்மையினரை அழிக்கத் துடிக்கிறது பாஜக.. மெகபூபா முப்தி பாய்ச்சல்

Google Oneindia Tamil News

காஷ்மீர்: சிறுபான்மையினரை பாஜக அழிக்கத்துடிக்கிறது என ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கதுவா மாவட்டத்தில் பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மோடி அந்த மாநிலத்திற்கு தனி பிரதமர் தேவை என்று தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசியதை குறிப்பிட்டு ஜம்மு காஷ்மீரை முப்தி மற்றும் அப்துல்லாவின் குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக ஆண்டுவிட்டன. அவர்கள் நாட்டை துண்டாட நினைக்கின்றனர் அவர்களை அனுமதிக்கமாட்டோம்" என்று பேசியிருந்தார்.

Mahbooba Mufti slams PM Modi for lashing her

மோடியின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மெகபூபா முப்தி முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் அழிக்கும் நச்சுதிட்டத்துடன் பாஜக செயல்படுகிறது அவர்கள் நாட்டை துண்டாட நினைக்கிறார்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களை பாஜக அழிக்க நினைக்கிறது என்று கூறியவர் அரசியலமைப்புச் சட்டம் 370பிரிவு தெரிந்துதானே ஆட்சி செய்கிறீர்கள் என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

மக்களை தவறாக வழிநடத்தும் மோடி தன்னை நாட்டுக்கு ஒப்பாக, இணையாக வைத்துக்கொண்டு பேசுகிறார். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நாடு குறித்த தேசப்பற்றும், கடமையும் இருக்கிறது. இந்தியா என்பது மோடியும் அல்ல, மோடி என்பது இந்தியாவும் அல்ல என்று வெளுத்து வாங்கியுள்ளார். அதிகாரத்தையும் இரக்கத்தையும், மக்களிடம் இருந்து பெறுவதற்காக, எதிர்க்கட்சிகளை அவதூறாக மோடி பேசுகிறார். இவ்வாறு எதிர்க்கட்சிகளை அவதூறு பேசும் மோடி ஏன் தேர்தலுக்கு முன் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி கூட்டணி குறித்து பேச வேண்டும. கடந்த 1999-ம் ஆண்டில் தேசிய மாநாட்டுக்க கட்சியுடனும், கடந்த 2015-ம் ஆண்டில் பிடிபி கட்சியுடனும் ஏன் கூட்டணி அமைத்தீர்கள் என்றும் சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார்.

கருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்கருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்

மோடியின் இந்த கருத்து குறித்து பதில் அளித்து பேசிய தேசிய மாநாடாட்டுக் கட்சியின் தலைவரும், எம்.பியுமான பரூக் அப்துல்லா அமித் ஷாவும், மோடியும் தேசத்தை சாதி ரீதியாக, மதரீதியாக பிளவுபடுத்தும் எண்ணத்துடன் உள்ளார்கள். இவர்கள் இருவரும் மக்களின் மிகப்பெரிய எதிரிகள். பாஜக அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற முயல்கிறது எந்த நம்பிக்கையுள்ளவர்களும் வாழ்வதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. அதே அரசமைப்புச் சட்டம்தான் காஷ்மீர் மாநிலத்துக்கு 35ஏ, 370 பிரிவின் கீழ் சிறப்பு உரிமையையும் வழங்கி இருக்கிறது. பாஜகவின் இந்த ஒரு திட்டம் மாநிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும்" என சாடியுள்ளார்.

மோடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் இது குறித்து கூறுகையில் " கடந்த 2014-ம் ஆண்டு பேசிய மோடி முப்தி மற்றும் அப்துல்லா, குடும்பத்தாரை ஜம்மு காஷ்மீரிலிருந்து விரட்ட வேண்டும் என்று பேசினார். அதன்பின் முப்தி குடும்பத்தாருடன் கூட்டணி வைத்து அவர்களில் இருவரை முதல்வராக்கினார். 2019-ம் ஆண்டில் மீண்டும் இரு அரசியல் குடும்பத்தாரையும் விரட்டுவோம் என்று மோடி கூறுகிறார். இதுவும் மோடியின் வெற்றுப்பேச்சு " எனக் கூறியுள்ளார்

English summary
Jammu Kashmir former CM Mahbooba Mufti has lashed at PM Modi for his comments on her and Farooq Abdullah's families.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X