For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகிந்த ராஜபக்சே நாளை திருப்பதி வருகை- சந்திரபாபு நாயுடுவையும் சந்திக்கிறார்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நாளை திருப்பதி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

திருப்பத: மகிந்த ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வர உள்ளார். ஏழுமலையானை தரிசிக்கும் ராஜபக்சே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சே வருவதை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஜபக்சே வந்து செல்லும் ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலை பாதைகள், ஓய்வெடுக்கும் விருந்தினர் மாளிகை, திருப்பதி கோயில், வராக சுவாமி கோயில் உள்ளிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Mahinda Rajapaksa to visit Tirupati on Tomorrow

இலங்கை உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில் ராஜபக்சே வருகிறார். இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சிறிசேனா வெற்றி பெற்று அதிபர் ஆனார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம்தான் அங்கு முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேயின் இலங்கை மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் பின் தங்கின. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகிறார் ராஜபக்சே.

English summary
Mahinda Rajapaksa to visit Tirupathi offer prayer lord Venkateswara on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X