For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைக்கார பெண் ஒரு சிஐஏ ஏஜெண்ட்: தேவ்யானியின் தந்தை உத்தம் கோப்ராகடே அதிரடி புகார்

By Mathi
Google Oneindia Tamil News

Maid could be CIA agent, says Khobragade's father
மும்பை: தமது மகள் தேவ்யானியின் வீட்டில் பணியில் இருந்த வேலைக்கார பெண் சங்கீதா, அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏவின் உளவாளி என்று தந்தை உத்தம் கோப்ராகடே அதிரடி புகாரைத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேயுடன் செய்தியாளர்களிடம் பேசிய உத்தம் கோப்ராகடே, கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைகளை ஆராயும் போது மிகப் பெரிய சதி இருப்பதை உணர முடிகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால் வேலைக்காரப் பெண் சங்கீகா, சிஐஏ உளவாளியாகத்தான் இருந்திருப்பார் போல.. இந்த வழக்கில் நாங்கள் பலிகடாக்களாக்கப்பட்டுவிட்டோம். தேவ்யானி மிகவும் துணிச்சலான பெண். தமது கடமையில் சிறப்பாக செயல்படக் கூடியவள் என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராம்தாஸ் அத்வாலே, வேலைக்கார பெண் சிஐஏ ஏஜெண்ட் என்ற அடிப்படையில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். தேவ்யானி மீதான வழக்கு கைவிடப்படும் வரை எமது கட்சித் தொண்டர்களின் போராட்டம் தொடரும் என்றார்.

English summary
Uttam Khobragade, former IAS officer and father of Devyani Khobragade, India's deputy consul general in New York, on Saturday alleged her daughter's former maid Sangeeta Richards could be a 'CIA agent'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X