For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் வந்தது... பேராபத்து தவிர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தீ ஏற்பட்ட பெரும் தீவிபத்து தீயணைப்புப் படையினரின் தொடர் முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை.

Major fire breaks out at Parliament premises

முன்னதாக ரயில் பவனில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து தீ பரவியதாகவும், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்குக் காரணம் என்றும் உறுதி செய்யப்படாத இருவேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்துக் காரணமாக நாடாளுமன்ற வளாகமே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. பல கி.மீ., தொலைவிற்கு இந்த புகை மண்டலமாக தெரிந்ததால் பரபரப்பு கூடியது.

Major fire breaks out at Parliament premises

10க்கும் மேற்பட்ட வண்டிகளில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.

Major fire breaks out at Parliament premises

தீவிபத்துக்குள்ளான கட்டடத்திற்குள் யாரேனும் இருந்தனரா என்பது குறி்த்துத் தெரியவில்லை.

மார்ச் 19ம் தேதி இதேபோல நாடாளுமன்ற வளாகத்தின் 5ம் எண் நுழைவாயில் பகுதியில் ஏசி வயரிங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

English summary
A major fire has broken out in Parliament premises. Several fire tenders have been pressed into service to douse the flames at Parliament power station
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X