For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லை மோதல்: லடாக்கில் இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை

Google Oneindia Tamil News

லே: லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

லடாக்கின் கிழக்குப் பகுதியான கால்வன் பள்ளத்தாக்கில் (கல்வன், கல்வான், கால்வான்) ஜூன் 15-ந் தேதியன்று சீனா அத்துமீறி தாக்கியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

Major General level talks between India-China at Ladakh

இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 43 சீனா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளிடையே யுத்த சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனிடையே இந்தியா - சீனா இடையே பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா-சீனா- ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று நமது நிலைப்பாட்டை விளக்க இருக்கிறார்.

மருத்துவ படிப்புகள்- ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு கோரும் ஹைகோர்ட் வழக்கு- ஜூலை 9-க்கு ஒத்திவைப்புமருத்துவ படிப்புகள்- ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு கோரும் ஹைகோர்ட் வழக்கு- ஜூலை 9-க்கு ஒத்திவைப்பு

Recommended Video

    India China Border : ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?

    இன்னொரு பக்கம் எல்லையில் சீனா தமது முப்படைகளையும் பெருமளவில் குவித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவமும் முழு வீச்சில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தயார் நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் லடாக் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதில் இந்திய சீனா ராணுவ மேஜர் ஜெனரல்கள் நிலையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

    English summary
    Major General level talks between India and China are underway at Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X