For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகர சங்கராந்தி நாளில் பேரொளியாக பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன் - ரகசியம் தெரியுமா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினத்தன்று மாலை நேரத்தில் காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட

Google Oneindia Tamil News

பட்டனம் திட்டா: மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி தினமான தை மாதம் 1ஆம் தேதி மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் வானில் தோன்றும் ஒரு புனிதமான நட்சத்திரமாகும். மற்ற நாட்களில் அது தெரியாது. சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற் கோவிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மகர ஜோதியை காணவேண்டியே, ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் கடுமையான விரத முறைகளை கடைபிடித்து வருவார்கள். இறுதியில் இருமுடி கட்டிக்கொண்டு மகர விளக்கு பூஜை தினத்தன்று சபரிமலைக்கு வந்து காத்திருப்பார்கள்.

Makara Jyothi Darshanam Secrets in Ponnambala medu

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளில், காட்டுத் தேவதைகள் மற்றும் தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கான குருத்தி எனும் சடங்கு நடக்கிறது.

தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி எனப்படும் நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.

வானில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில், அதிக ஒளிமயமாக இருப்பது 'ஸிரியஸ்' எனும் நட்சத்திரக் கூட்டமாகும். இவை பார்ப்பதற்கு வேடனைப் போல் இருக்கும். இந்த நட்சத்திரக் கூட்டத்தை வேத காலத்தில் 'ம்ருக வியாத' என்று அழைத்தனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை, ஐயப்பனின் மற்றொரு தோற்றமான வேடன் வடிவிலான ஜோதி என்றே சொல்கின்றனர்.

ஆண்டாளின் கூடாரவல்லியும்... அக்கார அடிசல் நைவேத்தியமும் - என்ன பலன்கள் தெரியுமாஆண்டாளின் கூடாரவல்லியும்... அக்கார அடிசல் நைவேத்தியமும் - என்ன பலன்கள் தெரியுமா

மகர ஜோதி, மகர விளக்கு தரிசனம் என்பது அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வாகும். பெரும்பாலானவர்கள் இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்கின்றனர். மகர விளக்கு என்பது மகர சங்கராந்தி தினமான, அதே தை 1ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், காட்டில் குடியிருந்து வரும் ஆதிவாசிகள், ஐயப்பனுக்காக பொன்னம்பல மேட்டில் காட்டும் கற்பூர ஆரத்தியாகும். எப்படி திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தினத்தன்று மலையில் தீபம் ஏற்றுகின்றனரோ, அது போலவே தான், மகர விளக்கு பூஜையன்று வானில் தோன்றும் நட்சத்திரத்தை அடுத்து நடக்கும் கற்பூர ஆரத்தியாகும்.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும். பேரொளியாக ஜோதி வடிவத்தில் காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்த உடன் பக்தர்கள் ஓம் சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி முழக்கம் எழுப்புவது அந்த விண்ணை எட்டும் அதை கேட்கும் பலருக்கும் மெய் சிலிர்க்கும்.

English summary
Makara Jyoti Darshanam in Ponnambala medu is a sacred star that appears in the sky at sunset on the evening of the 1st day of Thai Month,makara matham the day of Makara Sankaranti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X