For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாடிக்கையாளரின் திருப்தியே வெற்றியின் தாரக மந்திரம்: 'டெய்லர் மேன்' வித்யா நடராஜ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: தையற்கலை பெண்களின் கை வந்த கலை. ஆனால் பெண் தையற்கலைஞர்கள் பெரும்பாலும் பெண்களுக்கான ப்ளவுஸ், சுடிதார், சல்வார், என டிசைன் செய்வதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வித்யா நடராஜ், சற்றே வித்யாசமாக டெய்லர்மென் என்ற ஆண்களின் ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார்.

வித்யாவைப் பார்த்தலே போதும் அவரின் புன்னகை தரும் நம்பிக்கை எப்படி ஒரு சிறந்த தொழில் முனைவோராக இருக்கிறார் என்பதை உணர்த்தி விடும்.

டெய்லர் மேன் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆண்களின் பிரத்யேக ஆடை வடிவமைப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தை வித்யா தொடங்குவதற்கு முன்பு அவரது பின்புலத்தைப் பற்றி அறிந்து கொள்வது கொஞ்சம் அவசியமானது.

இலங்கையில் பிறந்தாலும் வித்யாவின் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். பள்ளிப் படிப்புக்குப் பின்பு லண்டன் சென்று கணிதத்தில் பட்டம் பெற்ற வித்யா, லண்டனில் சில காலம் பணிபுரிந்து விட்டு இந்தியா திரும்பினார். ஆனாலும் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் மிகச்சிறந்த பிசினஸ் பள்ளியில் எம்.பி.ஏ படித்தார். படிப்பிற்குப் பின்னர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்தார் வித்யா.

பெண்களின் வாழ்வில் நிகழும் மிக முக்கியமான தருணமான திருமணம் வித்யாவிற்கு நிகழ்ந்தது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட கிருஷ்ணன் செட்டி அன் சன்ஸ் ஜூவல்லர்ஸ்சின் இணை நிர்வாக இயக்குநர் கணேஷ் நாராயணன் என்பவரை மணமுடித்த வித்யா, பெங்களூர் சிலிகான் வேலிக்கு இடம் பெயர்ந்தார். புளூ ஸ்டோன் என்ற ஆன்லைன் நகை விற்பனையகத்தினை தொடங்கினார்.

தன்னுடைய அடுத்த முயற்சியாக டெய்லர்மேன் என்ற ஆண்களின் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை கவுதம் சாவ்லா என்பவருடன் இணைந்து தொடங்கியுள்ளார். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இளம் வயதிலேயே ஆன்லைன் நகை விற்பனையகம் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள வித்யா தனது வெற்றிக்கான ரகசியத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.


அது என்ன டெய்லர்மேன்?

ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்யும் நிறுவனம்தான் இந்த டெய்லர்மேன். இந்தியாவில் பெங்களூர், சென்னை, கொல்கத்தாவில் மூன்று விற்பனை நிலையங்கள் உள்ளன. சாதாரண டெய்லர்கடைகளில் ஆடைகளை தைத்து உடுத்துவதற்கும், எங்களின் டெய்லர்மேன் நிறுவனத்தில் ஆடைகளை தைத்து உடுத்துவதற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை ஆண்கள் உணர்வார்கள்.

தரமான துணிகளில் தைக்கப்பட்ட சர்வதேச தரத்திற்கு இணையான ஆடைகளை சரியான விலையில் தருகிறோம். ஒருமுறை கடைக்கு நேரிடையாக வந்து ஆடைகளை எடுப்பவர்கள் அடுத்தமுறை எங்களின் கடைக்கு நேரிடையாக வரத்தேவையிருக்காது எங்களின் டெய்லர்மேன் இணையதளத்திற்கு வந்து அவர்களுக்குத் தேவையான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனின் ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளரின் வீட்டிற்கு ஒரு டெய்லர் நேரிடையாகச் சென்றுஅளவுகளை எடுத்துக்கொண்டு வந்து சரியான அளவில் தைத்து கொடுத்துவிடுவோம்.

டெய்லர்மேன் தொடங்கிய நேரத்தில் சந்தித்த சவால்கள் என்னென்ன?

இந்த நிறுவனத்தை தொடங்கும் போது சில சவால்கள், சிரமங்கள் ஏற்பட்டது உண்மைதான். தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டதோடு நேரிடையான விற்பனை, ஆன்லைன் வர்த்தகம் என இரண்டிலும் வர்த்தகம் செய்து வெற்றி பெற்றுள்ளோம்.

ஆண்களின் ஆடைகளை பெண்ணான நீங்கள் வர்த்தகம் செய்வதை எப்படி உணர்கிறீர்கள்?
என்ன பொருளை விற்பனை செய்கிறோம் என்பது எனக்கு முக்கியமில்லை. வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் பொருட்களை தருகிறோமா? என்பதுதான் முக்கியமானது. பெண்களுக்கு பன்முகத்திறமை உள்ளது என்பதை உணர்த்தவே இந்த துறையில் இறங்கினேன். பெண் என்பதால் எனக்கு இதில் எந்த சிக்கலும் வரவில்லை. பெங்களூருக்கு அருகில் இந்த ஆடை தயாரிப்பு நிறுவனம் உள்ளது. ஆடைகளை வாங்குபவர்களுக்கு சரியான இடம் தெரிந்து விட்டால் போதும், அது தரமானதாக இருந்தால் நம்மை கண்டிப்பாக தேடி வருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது.

Making suits for all: Meet Vidya Nataraj, Bangalore's 'Tailorwoman'

டெய்லர் மேன் வர்த்தகத்திற்கு இணையதளம் உதவியாக இருக்கிறதா?

ஃபேஸ்புக் பக்கத்தில் தினசரி அப்டேட் செய்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்களுடன் ஃபேஸ்புக் வழியாக தொடர்பு கொள்கின்றனர். எங்களின் இணையதள பக்கத்தை வாடிக்கையாளர்கள் பார்வையிடுகின்றனர். நேரிடையாக எங்களின் கடைகளுக்கு வந்து வாங்கிச் செல்வதோடு மட்டுமல்லாது இணையம் வழியாகவும் எங்களுக்கு அளவுகளைக் கூறி ஆர்டர் கொடுக்கின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கு எங்களின் டெய்லர்மேன் உடைகள் பிடித்தமானதாகிவிட்டது. தரமான ஆடைகளை குறைவான விலையில் கொடுக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களில் அனில் கும்ளே, ரோகன் போபன்னா ஆகியோர் முக்கியமானவர்கள்.

வித்யாவின் வெற்றிக்கான மந்திரம் என்ன?

வாடிக்கையாளர் திருப்திதான் எங்களின் தாரக மந்திரம் என்கிறார் வித்யா. வாடிக்கையாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்குத் தேவையானவைகளை அளிப்பதோடு அவர்களுடன் சரியான உறவை பேணுவதும் இந்த துறையில் மிகமுக்கியமானது.

சினிமாவும் உடற்பயிற்சியும்

பிசினஸ் பற்றிய பேச்சினூடே பேச்சு சொந்த வாழ்க்கையின் பக்கம் திரும்பியது. திரைப்படங்களுக்கு செல்வதும், உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதும் தன்னுடைய விருப்பத்திற்குரியது என்கிறார் வித்யா. கணவர் கணேஷ் நகைக்கடை தொழிலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் இருவேறு பிசினசில் இருந்தாலும் தினசரி மாலை நேரங்களில் சந்தித்து ஒருவருக்கொருவர் தங்களின் பணிச்சூழலை, சிக்கல்களை பகிர்ந்து கொள்வோம் என்று கூறி சிரிக்கிறார் வித்யா.

ஒருவரின் வர்த்தகத்தில் மற்றொருவரின் தலையீடு இருக்குமா?

நிச்சயமாக இல்லை என்கிறார் வித்யா. நாங்கள் இருவருமே சுதந்திரமாக எங்களின் யாருடைய தலையீடும் இல்லாமல் எங்களின் பணிகளை செய்கிறோம். டெய்லர்மேன் நிறுவனத்தின் விற்பனை மையங்களை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் நிறுவவேண்டும் என்பதுதான் வித்யாவின் அடுத்த திட்டம். விரைவில் மும்பை மற்றும் டெல்லியில் டெய்லர்மேன் ஷாப்களை திறக்கப் போகிறோம். அது மட்டுமல்லாது பெண்களின் பிரத்யேக ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கும் எண்ணமும் உள்ளது என்கிறார் வித்யா நடராஜ்.

English summary
Vidya Nataraj isn't your typical businessperson. Dressed in casuals and adorned by a bright smile, she looks quite immune to the stress in the hectic business life. This confident young woman, who is the co-founder of the fast-growing men's apparel group 'Tailorman', is sure about the words she speaks, the work she does and the life she leads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X