For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி!

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

போபால்: மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் போபாலில் பாஜக சார்பாக போட்டியிட இருக்கிறார் என்கிறார்கள்.

செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

இந்த குண்டுவெடிப்பை காங்கிரஸ் கட்சி காவி தீவிரவாதம் என்று குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத்தான் தற்போது பாஜக வாய்ப்பளிக்க உள்ளது.

சட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி! சட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி!

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்குர். அடிப்படை வாத கருத்து கொண்டு இவர் இதற்கு முன் பல வழக்குகளில் சிக்கி இருக்கிறார். அதேபோல் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை நிறைய சொல்லி இருக்கிறார்.

பாஜக இணைப்பு

பாஜக இணைப்பு

இந்த நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது இவர் தேர்தலிலும் நிற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

வரும் லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். போபால் தொகுதியில் இவர் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சாத்வி பிரக்யா தாக்குர்

சாத்வி பிரக்யா தாக்குர்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்வி பிரக்யா தாக்குர், நான் கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெறுவேன். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. எனக்கு எதிரான வழக்குகளையும் நான் எளிதாக எதிர்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Malegaon bomb blast accused Sadhvi Pragya Thakur join in BJP, will contest from Bhopal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X