For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம்.. மகாராஷ்டிராவில் நிரூபணம்

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்யலாம் என்பது மகாராஷ்டிராவில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

By Devarajan
Google Oneindia Tamil News

மும்பை: ஓட்டுப் போடும் மெஷினில்,முறைகேடு நடந்துள்ளதை மகாராஷ்டிராவில் கண்டுபிடித்துள்ளனர். மின்னணு இயந்திரத்திலும் கள்ள ஓட்டுப் போடமுடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

மகாராஷ்டிராவில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலின்போது, சுல்தான்பூர் என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பொறுத்தப்பட்டிருந்த மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என புகார் எழுந்தது.

Malfunctioning EVM at Buldhana contradicts EC tamper-proof claim

சுயேச்சை வேட்பாளரின் சின்னத்திற்கு வாக்கை செலுத்த விரும்பி, வாக்காளர்கள் பட்டனை அழுத்தினால், அது பாஜக சின்னத்தில் ஓட்டு பதிவாவதாகவும் கூறப்பட்டது.

இதன்பேரில், விளக்கம் கேட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அனில் கல்காலி என்பவர் மனு செய்தார். அதில், மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக, தெரியவந்தது.

இந்த விவரத்தை, அவர் மாவட்ட ஆட்சியரிடம், கல்காலி சமர்ப்பித்தார். இதனால், தற்போது மறுதேர்தல் நடத்தும் சிக்கல் மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் மாநில தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றி தகவல் தெரிவித்ததன்பேரில், தற்போது சுல்தான்புர் பகுதியில் மறுதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A malfunctioning EVM had compelled the State Election Commission (SEC) to hold fresh elections at a centre in Sultanpur, Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X