For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்லையா ஓட்டம்.. ஐபிஎல் மோசடி.. பாஜகவில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் சு.சாமி

விஜய் மல்லையா, அருண் ஜேட்லி விவகாரத்தில் அடுத்தடுத்து குண்டுகளை வீசி தான் இருக்கும் பாஜக கட்சியையே ஆட்டம் காண வைத்துள்ளார் சுப்பிரமணியன் சாமி.

Google Oneindia Tamil News

டெல்லி: விஜய் மல்லையா, அருண் ஜேட்லி விவகாரத்தில் அடுத்தடுத்து குண்டுகளை வீசி தான் இருக்கும் பாஜக கட்சியையே ஆட்டம் காண வைத்துள்ளார் சுப்பிரமணியன் சாமி.

கிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 19க்கும் அதிகமான வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார்.

மோசடி செய்ததோடு லண்டனுக்கும் பறந்து எஸ்கேப் ஆனார். இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

நிதி அமைச்சரை பார்த்தார்

நிதி அமைச்சரை பார்த்தார்

இந்த நிலையில் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பல மாதங்களுக்கு முன்பே பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சாமி ஏற்கனவே டிவிட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 12ம் தேதி சுப்பிரமணியன் சாமி இதுபற்றி டிவிட் செய்திருந்தார்.

[மல்லையா - ஜெட்லி சந்திப்பு.. மோடி முன்பு உள்ள 3 ஆப்ஷன் இதுதான்! ]

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு

காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு

இவரது இந்த பேச்சுதான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தீனியாக அமைந்து இருக்கிறது. ஆம், ரபேல் ஊழல், பெட்ரோல் விலை, ரூபாய் மதிப்பு என்று மூன்றையும் வைத்து பாஜகவை எதிர்த்த காங்கிரஸ் கட்சி, இப்போது நேரடியாக மல்லையா விவகாரத்தில் குதித்து உள்ளது. இதை வைத்து அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று கூட கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த குண்டு

அடுத்த குண்டு

இந்த நிலையில் தன் கட்சியை சேர்ந்த நிதி அமைச்சரே பிரச்சனையில் சிக்கியதை பற்றி கூட கவலைப்படாமல் நேற்று இரவு சுப்பிரமணியன் சாமி இன்னொரு பேட்டி அளித்தார். அதில், நிதித்துறைதான், மல்லையாவின் லுக் அவுட் நோட்டிஸின் வலுவை குறைத்துள்ளது. இதன் காரணமாகவே, மல்லையா எளிதாக தப்பிக்க முடிந்தது. இதை தனியாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது இன்னும் பிரச்சனையை உண்டாக்கியது.

[1 ரூபாய்க்கு "ஆர்சிபி" அணியை வாங்க பேரம் நடந்ததாக சு.சாமி பரபரப்புத் தகவல்]

கடைசி குண்டு

கடைசி குண்டு

இந்த நிலையில், ஐபிஎல்லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விற்று விடுமாறு மல்லையாவிடம் யாரோ முக்கிய பிரமுகர் பேரம் பேசியுள்ளார் என்று இன்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார். இது பாஜகவை சேர்ந்த ஒருவர்தான் என்று இப்போதே சமூக வலைதளத்தில் விவாதம் தொடங்கி உள்ளது. ஐபிஎல் ஊழல் ஏற்கனவே பிரச்சனை ஆன நிலையில் இது இன்னும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.

English summary
Mallaiya Escape: Subramaniyan Swamy did a Surgical Strike on his own BJP party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X