For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்குத் தடை... மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு!

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மேற்கு வங்கத்தில் 125 ஆர்.எஸ்.எஸ். பள்ளிகள் அதிரடி மூடல்... மம்தா நடவடிக்கை

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளுக்கு தடை விதித்து மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இன்னும் நிறைய பள்ளிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    மேற்கு வங்கத்தில் 1975ல் இருந்து ஆர்.எஸ்.எஸ் பள்ளிக் கூடங்கள் நடத்தி வருகிறது. 2012ல் மேற்கு வங்கத்தில் உருவான சில விதிமுறைகளை, இந்த பள்ளிகள் பின்பற்றாத காரணத்தால் தற்போது மூடப்பட்டு இருக்கிறது.

    இதற்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இஸ்லாமியர்கள் நடத்தும் மதராஸாக்களை மூட முடியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

    தடையில்லா சான்று

    தடையில்லா சான்று

    2012ல் வந்த விதியின் படி அங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் அரசின் தடை இல்லா சான்று பெற வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகள் இந்த சான்றுகளை பெறவில்லை. அதோடு மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் அந்த பள்ளிகள் செயல்பட்டு வந்து இருக்கிறது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    இதுவரை 125 ஆர்.எஸ்.எஸ் பள்ளிகள் இப்படி அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பள்ளிகளுக்கான தடை உத்தரவை மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அனுப்பி உள்ளார். இங்கு பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்.

    இன்னும் சில

    இன்னும் சில

    மொத்தமாக 493 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸ் மூலம் அங்கு நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகள் அனைத்திலும் சோதனை நடத்தப்பட உள்ளது. மீதம் இருக்கும் பள்ளிகளும் விரைவில் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    பிரச்சனை

    பிரச்சனை

    இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பேசும் போது ''அந்த பள்ளிகள் எல்லாம் விதிக்கு மாறாக செயல்பட்டு இருக்கிறது. முக்கியமாக அரசு பாடத்திட்டமே பின்பற்றப்படவில்லை. சிறுவர்கள் மனதில் அவர்கள் வன்முறையை விதித்து இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Mamata Banerjee bans 125 RSS running schools in West Bengal. She says that, they will ban some more schools which is belongs to RSS. There 373 more RSS schools in West Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X