For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டாட்சியை சீர்குலைப்பதா? ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டுக்கு மமதா பானர்ஜி கடும் கண்டனம்!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ் வீடு உட்பட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி சோதனை நடைபெறும் ராமமோகன் ராவ் வீடு முன்பாக மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மமதா பானர்ஜி, ஏற்கனவே டெல்லியில் தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. தற்போது தமிழக அரசின் தலைமை செயலர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.

கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்கும் வகையில் சோதனைகள் நடத்துவதா? இது பழிவாங்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has condemend the IT Raid at Tamilnadu Chief Secretary Ram Mohan Rao's residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X