For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் மே. வங்க தொழிலாளர்கள் படுகொலை- உண்மையான காரணம் வெளிவர மமதா பானர்ஜி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் தங்களது மாநில கூலி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையான காரணம் வெளிவர தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் வெளி மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இருந்து கூலித் தொழிலாளர்களாக வந்த 5 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

Mamata Banerjee demands strong probe for of Bengal labours killing

இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ச்சியாக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மகாராஷ்டிரா சட்டசபை பாஜக குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வுமகாராஷ்டிரா சட்டசபை பாஜக குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு

அதில், பலியான கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படுகொலை சம்பவத்தின் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான விவரங்களை திரட்டுவதற்கான சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has demanded that the strong probe for the Bengal migrant labours killed by Terrorists in Jammu Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X