For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெரசாவுக்கு புனிதர் பட்டம்... வாடிகன் செல்கிறார் மமதா பானர்ஜி

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொல்வதற்காக மேற்கு வங்கு முதல்வர் மமதா பானர்ஜி வரும் செப்டம்பர் மாதம் வாடிகன் செல்கிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா கொல்கத்தா நகரில் வசித்த ஏழைகளுக்கும், நலிந்தோருக்கும் சேவையாற்றினார். கடந்த 1997ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அவர் மறைந்தார். தெரசாவின் மறைவுக்குப் பிறகு இரண்டு அற்புதங்களை நிகழ்த்தியதாக அவருக்கு புனிதர் பட்டம் வழங்கவுள்ளதாக போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார்.

Mamata Banerjee to go to Rome for Teresa’s sainthood

இதனிடையே அன்னை தெரசா நிறுவிய மிஷினரி ஆஃப் சாரிட்டீஸ் அமைப்பின் தலைவர் சகோதரி பிரேமா மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று சந்தித்தார். அப்போது அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டமளிக்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு மமதா பானர்ஜிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து மம்தா தமது ட்விட்டர் பக்கத்தில், வாடிகனில் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ள புனிதர் பட்டமளிப்பு விழாவில், சகோதரி பிரேமாவின் அழைப்பை ஏற்று கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
West Bengal chief minister Mamata Banerjee plans to travel to Vatican City to attend the canonisation of blessed Mother Teresa on September 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X