• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம ஊர்ல டீ தானே குடிக்கறாங்க... மேற்கு வங்க முதல்வர் மமதா டீ போட்டு அசத்தல் - செம ஸ்கோர்

|

நந்திகிராம்: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மமதா பானர்ஜி, பிரசாரத்தின் போது டீக்கடைக்குள் புகுந்து டக்கென்று பாலை ஊற்றி டீ தூளை போட்டு ஒரு ஆற்று ஆற்றி தொண்டர்களுக்கு கொடுத்து அசத்தினார்.

தேர்தல் திருவிழா வந்து விட்டாலே போதும் வாக்காளர்களை கவர ஆள் ஆளுக்கு செய்யும் வேலைகள் ஆளை விடுங்கடா சாமி என்று சொல்ல வைத்து விடும். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

Mamata Banerjee makes tea At Nandigram

மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

பத்தாண்டு காலமாக ஆட்சியில் உள்ளது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து அரியணையில் அமரவேண்டும் என்று முழு முனைப்போடு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் மமதா பானர்ஜி. பாஜக விடுத்த சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த கையோடு பிரசாரத்திற்கு கிளம்பி விட்டார். மமதா பானர்ஜியின் பேச்சில் அனல் பறக்கிறது. என் பெயரைக் கூட மறப்பேன், நந்திகிராமை மறக்க மாட்டேன் என்று கூறியுள்ள மமதா, "என்னிடம் இந்துத்துவா முத்திரையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என்றார்

நான் இந்துப் பிராமணப் பெண். என் வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஒவ்வொரு நாளும் சந்திபாத் செய்துவிட்டுத்தான் கிளம்புகிறேன். நான் ஏதோ வெளிமாநில ஆள் போல் கதைக்கட்டுகின்றனர். என்னுடைய பழைய தொகுதியான பாபானிபூர் சென்று பாருங்கள் நான் எவ்வளவு வளர்ச்சியை அங்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என்பது புரியும். நந்திகிராமை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் ஒரு வீட்டில் கூட வேலையில்லாதோர் என்ற நிலைமை இருக்காது. கல்வியற்றவர் என்று அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் அனைவருக்கும் கல்வி அளிப்பேன்.

நான் நந்திகிராமில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளேன், 3 மாதங்களுக்கு ஒரு முறை இங்கு வருவேன். சில நாட்கள் கழித்து இங்கு வந்து குடிசையில் தங்குவேன் என்றும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

தொகுதி முழுக்க பல இடங்களுக்கு நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் மமதா, முதல்வர் போல அல்லாமல் சாதாரண தொண்டர் போலத்தான் நடந்து கொள்கிறார். திடீரென்று பக்கத்தில் இருந்த டீ கடைக்குள் நுழைந்து டக்கென்று டீ போட ஆரம்பித்து விட்டார். டீ தூள், பால், சர்க்கரை கலந்து டம்ளரில் ஊற்றி கொடுத்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் தலைவர்கள் சாலையோர டீ கடைகளுக்குச் சென்று டீ சாப்பிட்டு அரசியல் ஸ்டண்ட் அடிக்கின்றனர். நுங்கு சாப்பிடுகின்றனர். பேக்கரியில் அமர்ந்து பிஸ்கெட் சாப்பிடுகின்றனர். சில தலைவர்களோ மதிய சாப்பாட்டை சாலையோர கடைகளில் முடித்துக்கொள்கின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பதோடு எதிர்கட்சியினரை எல்லைக்குள் கூட நுழைய விட மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார். நம்ம ஊர் அரசியல்வாதிகளை விட பிரசார பாணியில் பல புது யுக்திகளை கையாண்டு செம ஸ்கோர் செய்து வருகிறார் மமதா தீதி.

English summary
West Bengal chief minister Mamata Banerjee took over a tea stall in Nandigram and prepared tea for the people of the constituency from where she will fight the upcoming polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X