For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவை நிராகரித்த மக்கள்- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் 57 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவை உறுதி செய்திருக்கின்றன இத்தேர்தல் முடிவுகள்.

    Mamata Banerjee, MK Stalin congratulates Delhi CM Arvind Kejriwal

    200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவை என மிக தீவிரமாக தேர்தல் பணி செய்த பாஜகவுக்கு 13 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. டெல்லியை தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

    அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றியை எதிர்க்கட்சி தலைவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர். வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் ஆதரவு தந்துள்ளனர். மத்திய அரசின் சி.ஏ.ஏ. ,என்.ஆர்.சி. என்.பி.ஆர். ஆகியவை நிராகரிக்கப்பட்டுவிட்டன என கூறியுள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், மதவாத அரசியலை வீழ்த்தி மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசத்தின் நலன் கருதி கூட்டாட்சி உரிமைகள், மாநில நலன்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    பிகே சந்திப்பு

    இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி மக்களுக்கு பிரசாந்த் கிஷோர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

    English summary
    West Bengal CM Mamata Banerjee and DMK President MK Stalin congratulates Delhi CM Arvind Kejriwal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X