For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கத்தில் மீண்டும் கிங் என்று நிரூபித்த மமதா.. தவிடுபொடியான கணிப்புகள்.. இடைத்தேர்தலில் மாஸ் வெற்றி

மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கத்தில் மீண்டும் கிங் என்று நிரூபித்த மமதா... இடைத்தேர்தலில் வெற்றி

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டில் ஒரு தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

    மேற்கு வங்கத்தில் தனிப்பெரும் தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மமதா பானர்ஜி வலம் வந்தார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எழுச்சி பெற்றது.

    ஆனால் மேற்கு வங்கத்தில் தற்போது மிக மோசமான வேலையில்லா தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல் மாநில அரசு மீதும் மக்கள் கடும் கோபத்தில் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

    நான் இன்று பதவி ஏற்கவில்லை.. 3 கட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் மட்டும் பதவியேற்பு: அஜித் பவார்நான் இன்று பதவி ஏற்கவில்லை.. 3 கட்சிகளில் இருந்தும் தலா 2 பேர் மட்டும் பதவியேற்பு: அஜித் பவார்

    என்ன எதிரொலி

    என்ன எதிரொலி

    மக்களின் இந்த கோபம் கடந்த லோக்சபா தேர்தலில் அங்கு எதிரொலித்தது. 2014ல் மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் 18 இடங்களை வென்றது. இதனால் அங்கு பாஜக மாபெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 2014ல் 34 இடங்களை வென்ற திரிணாமுல் காங்கிரஸ் 2019ல் 22 இடங்களை மட்டுமே வென்றது.

    பாஜக கணிப்பு

    பாஜக கணிப்பு

    இதனால் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் அஸ்தமனம் துவங்குகிறது. அங்கும் பாஜக தன்னுடைய கால்களை பதிக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் அங்கு கண்டிப்பாக தாமரை மலரும் என்று கூறப்பட்டது. பாஜகவும் இதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    என்ன கணிப்பு

    என்ன கணிப்பு

    அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் காரக்பூர் சதார், கரீம்பூர், கலியா கஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. அரசு மீது மக்களுக்கு இருக்கும் விமர்சனத்தை மக்கள் இதில் காட்டுவார்கள். இந்த தேர்தல் மினி சட்டசபை தேர்தலாக இருக்கும் என்று கூறினார்கள். இதில் திரிணாமுல் தன்னுடைய வீழ்ச்சியை சந்திக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியானது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்கி மூன்று தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது. காரக்பூர் சதார் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் பிரதீப் சர்க்கார், கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் பீம்மாலேந்து சின்கா ராய், கலியா கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் தபான் தேப் சிங்கா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மோசம்

    மோசம்

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மூன்று தொகுதியில் இரண்டில் பாஜக இரண்டாம் இடமும், ஒரு தொகுதியில் பாஜக மூன்றாம் இடமும் பெற்றுள்ளது. இதனால் மக்களின் ஆதரவு இன்னும் மமதா பானர்ஜிக்கு இருக்கிறது. 2021லும் அவர் கண்டிப்பாக அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    உத்தரகாண்ட் எப்படி

    உத்தரகாண்ட் எப்படி

    அதே சமயம் உத்தரகாண்டில் ஒரு தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்தரகாண்டில் பித்தோராகார்க் தொகுதியில் நடந்த தேர்தலில் பாஜகவின் சந்திரா பாண்ட் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

    English summary
    CM Mamata Banerjee proves herself a Queen again by the WB by-election result.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X