For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News Live: பிரதமர் பதவி பற்றி கவலையில்லை.. பாஜக ஆட்சியை அகற்றுவதே நோக்கம்: மமதா ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு எதிர்ப்பு.. மம்தா தலைமையில் அணி திரண்ட எதிர்க்கட்சிகள்- வீடியோ

    கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி சற்று நேரத்தில் பேரணி தொடங்குகிறது.

    இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங் ஆகிய மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மமதா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக சித்தரிக்க திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருகிறது. எனவே இந்த பேரணி மற்றும் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, காலை பேரணியும் மாலையில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொல்கத்தாவில் குவிந்துள்ளனர்.

    Mamata Banerjee rally Live: Opposition leaders in Kolkata

    Newest First Oldest First
    4:13 PM, 19 Jan

    பாஜகவின் முடிவு ஆரம்பித்துவிட்டது - மமதா பானர்ஜி

    யார் பிரதமராவார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை

    பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்க கூடாது என்பதே எனது நோக்கம்- மமதா பானர்ஜி

    3:43 PM, 19 Jan

    எதிர்க்கட்சிகள் திரண்ட கொல்கத்தா மாநாட்டில் மமதா பானர்ஜி எழுச்சி உரை

    நாட்டுக்காக நாங்கள் இங்கே ஒன்றிணைந்துள்ளோம் என மமதா பானர்ஜி பேச்சு

    மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என மமதா பானர்ஜி ஆவேசம்

    பாஜக அரசில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என மமதா பானர்ஜி உரை

    அச்சீ தின் வரும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டீர்கள் என மமதா பானர்ஜி முழக்கம்

    விவசாயிகள், உழைப்பாளிகள், பெண்கள், இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே குறிக்கோள்

    2:36 PM, 19 Jan

    வரும் லோக்சபா தேர்தல் யார் பிரதமராக வர வேண்டும் என்பதற்கானது இல்லை-கேஜ்ரிவால்

    நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரை அதிகாரத்தில் இருந்து விரட்டும் தேர்தல்-கேஜ்ரிவால்

    கொல்கத்தாவில் மமதா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகள் பேரணியில் பேச்சு

    2:36 PM, 19 Jan

    நாட்டில் தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன- சந்திரபாபு நாயுடு பேச்சு

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும்- சந்திரபாபு நாயுடு

    1:27 PM, 19 Jan

    நமது ஒற்றுமை, இந்தியாவை காப்பாற்றும்- ஸ்டாலின்

    நன்றி, வணக்கம் என்று வங்கமொழியில் தெரிவித்து உரையை நிறைவு செய்தார் ஸ்டாலின்

    1:26 PM, 19 Jan

    மோடி ஒரு சிலரை பார்த்து பயப்படுவார், அதில் மமதா பானர்ஜி ஒருவர்- ஸ்டாலின்

    மேற்கு வங்கத்திற்குள் வருவதற்கே மோடி, அமித்ஷா பயப்படுகிறார்கள்- ஸ்டாலின்

    கருணாநிதி மீது பெரிய மரியாதை கொண்டவர் மமதா பானர்ஜி- ஸ்டாலின்

    கருணாநிதி மறைந்ததும் சென்னைக்கு உடனடியாக வந்து மரியாதை செலுத்தினார்

    அப்படிப்பட்ட மமதா பானர்ஜி அழைப்பை நான் எப்போதும் ஏற்பேன்- ஸ்டாலின்

    அடுத்த 5 மாதகாலமாக எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்

    தனியாக இருந்து பாஜகவை வீழ்த்த முடியாது, இதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்- ஸ்டாலின்

    1:23 PM, 19 Jan

    நரேந்திர மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 50 வருடங்கள் பின்நோக்கி போய்விடும்- ஸ்டாலின்
    1:16 PM, 19 Jan

    மமதா பானர்ஜி ஒரு இரும்பு பெண்மணி- ஸ்டாலின்

    பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்பதே பேரணியின் நோக்கம்

    எதிரியே இல்லை என்று கூறி வந்த மோடி இப்போது எதிர்க்கட்சிகளை பார்த்து அஞ்சுகிறார்- ஸ்டாலின்

    1:11 PM, 19 Jan

    வங்கத்து விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்துள்ளோம்- ஸ்டாலின்
    1:09 PM, 19 Jan

    வங்கத்து புலிகளுக்கு தமிழகத்து ஸ்டாலினின் வணக்கம்- ஸ்டாலின் பேச்சு

    தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி வங்கமொழி

    1:09 PM, 19 Jan

    மமதா பானர்ஜி கூட்டத்தில் ஸ்டாலின் உரை

    வங்கமொழியில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார் ஸ்டாலின்

    1:08 PM, 19 Jan

    மமதா பானர்ஜி கூட்டத்தில் பரூக் அப்துல்லா உரை

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்-பரூக் அப்துல்லா

    12:31 PM, 19 Jan

    மமதா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் அணி திரண்ட எதிர்க்கட்சிகள்

    பிரிகேட் மைதானத்தில் பிரமாண்ட பேரணி தொடங்கியது

    11:55 AM, 19 Jan

    கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட மாநாடு

    மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார் மமதா பானர்ஜி

    English summary
    All eyes would be on the opposition parties' show of strength rally in Kolkata today which is being organised by Mamata Banerjee-led Trinamool Congress. Several bigwigs from the opposition parties across the country are likely to share the dais with Banerjee who seems to taking a lead in forging a formidable alliance to take on the BJP in 2019 Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X