For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2021 வரைக்கும் தாங்காது.. அடுத்த வருடத்திற்குள் கவிழும் பாருங்க மம்தா ஆட்சி.. பாஜக பிரமுகர் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    மேற்கு வங்கத்தில் மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்

    கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி, இன்னும் 6 மாதங்கள் முதல் 1 வருடத்திற்குள் கவிழ்வது நிச்சயம் என பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ராகுல் சின்ஹா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்குவங்கத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. பாஜக கடந்த மக்களவை தேர்தலின் போது, அம்மாநிலத்தில் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. இதனையடுத்து மம்தாவின் கோட்டைக்குள் நுழைந்து கொடி நாட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பல திட்டங்களை தீட்டினார்.

    தேர்தலின் போதும் இரு கட்சி தலைவர்களிடையேயும் கடும் வார்த்தை போர் நிவலியது. பாஜக-விற்கு பூஜ்ஜியம் தான் மேற்கு வங்கத்தில் கிடைக்க போகிறது என தேர்தல் பிரச்சாரங்களின் போதெல்லாம் மம்தா கூறி வந்தார். இம்மாநிலத்தில் ஒரு இடம் கூட பாஜகவால் ஜெயிக்க முடியாது. மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டை என்றும் கூறி வந்தார் மம்தா பானர்ஜி.

    எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்... தேசிய அரசியலில் புதிய 'ட்விஸ்ட்'! எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காங்கிரஸ் அதிரடி திட்டம்... தேசிய அரசியலில் புதிய 'ட்விஸ்ட்'!

    திரிணாமுல் காங் - பாஜக களேபரம்

    திரிணாமுல் காங் - பாஜக களேபரம்

    திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால், பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்டன. இவர்களின் அராஜகங்களை பார்த்து மிரட்சியடைந்த தேர்தல் ஆணையம், வரலாற்றிலேயே முதல் முறையாக மேற்குவங்கத்தில் ஒரு நாளுக்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களை முடித்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது.

    மம்தாவின் கோட்டையை தகர்த்த பாஜக

    மம்தாவின் கோட்டையை தகர்த்த பாஜக

    இம்மாதிரி பல்வேறு களபேரங்களுக்கு மத்தியில் தான் நடைபெற்றது மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தல். கடந்த 23-ம் தேதி வெளிவந்த தேர்தல் முடிவுகளை பார்த்து மம்தா பானர்ஜி கடும் விரக்தியடைந்தார். ஏனெனில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், 18 தொகுதிகளை வென்ற பாஜக , மம்தாவுக்கு அதிர்ச்சியளித்தது. திரிணாமுல் காங்கிரஸ் 22 தெகுதிகளில் மட்டுமே வென்றது.

    எனக்குப் பிடிச்ச அமைச்சர்கள் யார் யார்.. வாங்க ஜாலியா விளையாடலாம்!

    மேற்கு வங்கத்திற்கும் குறி

    மேற்கு வங்கத்திற்கும் குறி

    இந்நிலையில் மத்தியில் வலுவாக அமர்ந்துள்ள பாஜக, தற்போது கண்ணில் படும் மாநிலங்களில் எல்லாம் ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்து புகுந்து விளையாட திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்க தீவிரமாக முயலும் அதே வேளையில், மேற்குவங்கத்திலும் மம்தா ஆட்சியை ஆட்டம் காண வைக்க அடுக்கடுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

    6 மாசம் இல்லனா 1 வருஷம் அவ்ளோதா

    6 மாசம் இல்லனா 1 வருஷம் அவ்ளோதா

    இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் நேற்று பாஜகவில் ஐக்கியமாகி தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர்களில் ஒருவான ராகுல் சின்ஹா, திரிணாமுல் அரசின் முழு பதவிகாலமான 2021 வரையில் மம்தாவால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியாது. எண்ணி இன்னும் 6 மாதங்களில் இருந்து 1 வருடத்திற்குள் மம்தாவின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

    ரத்த பூமியாக மாறியிருக்கும்

    ரத்த பூமியாக மாறியிருக்கும்

    ஆட்சியை கவிழ்க்க பாஜக எதுவும் செய்ய போவதில்லை என்ற அவர், தற்போதே மம்தாவின் ஆட்சியானது காவல்துறை மற்றும் சி.ஐ.டியின் உதவியுடனே நடைபெற்று வருகிறது என்றார். தற்போதைய தேர்தல் முடிவுகளை அடுத்து திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சி குழப்பங்கள் ஏற்படும். அதனாலேயே திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என கூறியுள்ளார். மேலும் மம்தாவின் கட்சி வன்முறைகளை பரப்புவதில் தான் கவனம் செலுத்துகிறது. பாஜக கட்சி பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் வன்முறையால் பாதிக்கப்பட்டனர். ஒருவேளை இந்த தேர்தலில் திரிணாமுல் வென்றிருக்கும் பட்சத்தில் மேற்குவங்கமே ரத்த பூமியாக மாறியிருக்கும் என்றார். இவ்வாறு அபாயம் ஏதும் ஏற்பட்டு விட கூடாது என்று தான், மக்களவை தேர்தலில் மம்தா கட்சியினருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாகவும் கூறினார்.

    English summary
    Rahul Sinha, one of the BJP national secretaries, has said that the Trinamool Congress regime headed by West Bengal Chief Minister Mamata Banerjee is set to fall within 6 months to 1 year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X