For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மமதா பானர்ஜியின் "சாவி".. வைரலாகி வரும் கவிதை

மமதா பானர்ஜி எழுதிய கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து மம்தா பானர்ஜி எழுதிய கவிதை ஒன்று வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அரசியலை தவிர, அதிக அளவு கலை ஆர்வம் உடையவர். இசைக்கருவிகளை வாசிப்பார், அழகாக ஓவியம் வரைவார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக கவிதைகளையும் நன்றாக எழுதுவார். இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.தற்போது வருகிற எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மாற்றாக பிரமாண்டமான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க பல கட்ட அம்சங்களை முன்னெடுத்து வருகிறார்.

தர்ணா

தர்ணா

இந்நிலையில்தான் ஒரு கவிதையை எழுதி இருக்கிறார். டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் முன்பு இந்த கவிதையை எழுதி உள்ளார்.

18 வரிகள்

18 வரிகள்

அந்த கவிதை மொத்தம் 18 வரிகளை கொண்டது. சாவி என்ற தலைப்பிட்டு எழுதிய அக்கவிதையை சமூக வலைத்தளத்தில் மம்தா பதிவிட்டுள்ளார். அந்த கவிதை முழுக்க முழுக்க ஜனநாயகத்தை வலியுறுத்தும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ஜனநாயகம்

ஜனநாயகம்

குறிப்பாக "மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, ஜனநாயகத்தை எப்படி இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடித்து சிதறும்" என்று அந்த கவிதையில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஜனநாயகத்தை பற்றிய கவிதையாக இருந்தாலும் பெரும்பாலான வரிகள் பிரதமர் மோடியை தாக்குவது போலவே இருக்கிறது என்று கூறப்படுகிறது. மம்தாவின் இந்த கவிதைதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

English summary
Mamata Banerjee writes poem "Key" to democracy and goes viral in social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X