For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக துச்சாதனன் கட்சி.. மக்களை வீட்டோடு வைத்து தீ வைக்கிறது.. மம்தா பானர்ஜி காட்டம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாஜக மீது மம்தா பானர்ஜி ஆவேசமாக சாடினார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாஜக மீது மம்தா பானர்ஜி ஆவேசமாக சாடினார்.

Mamata Banerjee says BJP is party of Dushasana

ரானாகாட் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அவர் நாம் பாஜக போல் துச்சாதனன் கட்சி அல்ல. அது மட்டுமல்ல. அவர்கள் முகமது பின் துக்ளக்கின் சந்ததியினரும் கூட. நாம் அவர்களை போல் மக்களை வீட்டோடு தீ வைப்பவர்கள் அல்ல.

கை கொடுக்காமல் சென்ற டிரம்ப்.. 'சும்மா கிழி' என்று கிழித்த நான்சி.. சந்தி சிரித்த நாடாளுமன்ற கூட்டம்கை கொடுக்காமல் சென்ற டிரம்ப்.. 'சும்மா கிழி' என்று கிழித்த நான்சி.. சந்தி சிரித்த நாடாளுமன்ற கூட்டம்

நாம் பாஜகவையோ, காங்கிரஸையோ, மார்க்சிஸ்ட் கட்சியையோ ஆதரிக்க கூடாது. மார்க்சிஸ்ட் என்ற பயங்கரவாத கட்சியால் 34 ஆண்டுகள் போராடினோம். காங்கிரஸ் அக்கட்சியின் சிறந்த நண்பன்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக ஆவணங்களை வாங்க பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் காத்திருக்கின்றனர்.

என்னிடம் என் அம்மாவின் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் என்னை நாட்டிலிருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு தூக்கி வீசி விடுமா என கேட்டார்.

English summary
West Bengal CM Mamata Banerjee says that BJP is party of Dushasana and that party is setting people's houses on fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X