For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷா சொல்வதெல்லாம் பொய்... விளாசும் மம்தா பானர்ஜி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு தொழில் துறை என அனைத்திலும் நம்பர் ஒன் ஆக உள்ளதாகவும், அமித்ஷா பொய் செல்வதாகவும் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Mamata Banerjee says BJP spreading garbage of lies

மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா மேற்கு வங்க மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டார். பாஜக சார்பில் நடந்த பேரணியில் பங்கேற்ற அவர் மம்தா பானர்ஜி அனைத்து துறைகளிலும் மம்தா அரசு தோல்வி அடைந்துவிட்டது.
நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஊழல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற பல நிலைகளில் மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-அமித்‌ஷா நீங்கள் உள்துறை மந்திரி. உங்கள் கட்சிக்காரர்கள் கூறும் பொய்யான தகவல்களை அப்படியே தெரிவிப்பது உங்களுக்கு அழகல்ல.தொழில்துறையில் மேற்கு வங்காளம் பூஜ்ஜியமாக இருப்பதாக அமித்‌ஷா கூறினார். ஆனால் உண்மையில், சிறு, குறு, நடுத்தர தொழில்களில் நமது மாநிலம்தான் 'நம்பர் 1' ஆக இருக்கிறது.

மம்தா கட்சி கரைய பிரசாந்த் கிஷோர் காரணமா..? மனம் குமுறி நிர்வாகிகள் விலகிச் செல்வது ஏன்..? மம்தா கட்சி கரைய பிரசாந்த் கிஷோர் காரணமா..? மனம் குமுறி நிர்வாகிகள் விலகிச் செல்வது ஏன்..?

நாம் கிராமப்புறங்களில் போதுமான சாலைகளை அமைக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். அதிலும் முன்னணி மாநிலம் மேற்கு வங்காளம்தான். இந்த தகவல் குறித்து மத்திய அரசே தகவல் வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் வளர்ச்சி குறித்து நான் விரிவான தகவல்களை அளிப்பேன் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

English summary
Mamata Banerjee has retorted that the West Bengal government is number one in all industries and that Amit Shah is lying
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X