For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமரே...ஒன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுங்கள் அல்லது பதவி விலகுங்கள்... மம்தா பானர்ஜி ஆவேசம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பிரதமர் மோடி ஒன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் அல்லது பதவி நாற்காலியை விட்டு விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Mamata Banerjee says PM Modi should either withdraw the farm law or step down

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிர்ப்பாகவும், நிறுவனங்களுக்கு சாதகமாவும் உள்ளது என்று இந்த தீர்மானம் கூறுகிறது. பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக சபையில் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- பாஜக எப்போதும் ஒவ்வொரு போராட்டத்தையும் பயங்கரவாத நடவடிக்கை என்று கேவலப்படுத்துகிறது. இந்த வேளாண் சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானவை. அவர்கள் அதை நாடளுமன்றத்தில் முரட்டுத்தனமாகப் பயன்படுத்தினர். விவசாயிகள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

டெல்லி சம்பவத்தில் விவசாயிகள் கைகாட்டிய... நடிகர் தீப் சித்து 26-ம் தேதி முதல் மாயம்? டெல்லி சம்பவத்தில் விவசாயிகள் கைகாட்டிய... நடிகர் தீப் சித்து 26-ம் தேதி முதல் மாயம்?

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். நீங்கள்(பிரதமர் மோடி) ஒன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள் அல்லது பதவி நாற்காலியை விட்டு வெளியேறுங்கள் என்று மம்தா பானர்ஜி பேசினார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has spoken out angrily that Prime Minister Modi should either withdraw the agriculture law or step down
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X