For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்.. சிறையில் இருக்கும் உமர் அப்துல்லாவா இது? மமதா பானர்ஜி வெளியிட்ட படம் 'வைரல்'

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலா ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Mamata Banerjee shares Omar Abdullahs Bearded Photo

இவர்களில் பெரும்பாலானோர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் முன்னாள் முதல்வர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் சிறையில் உள்ள உமர் அப்துல்லாவின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் இருக்கிறார். இப்படத்தை பகிர்ந்துள்ள மமதா பானர்ஜி, என்னால் இதை ஏற்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நமது ஜனநாயக நாட்டில் இது போன்ற நிகழ்வு துரதிருஷ்டவசமானது. எப்போது இவை முடிவுக்கு வருமோ? என அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்- பெண்கள் பெருந்திரளாக பங்கேற்புசி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு- தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்- பெண்கள் பெருந்திரளாக பங்கேற்பு

இருப்பினும் உமர் அப்துல்லாவின் படம் எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

English summary
West Bengal Chief Minsiter Mamata Banerjee shared a photograph of Former JK Chief Minister Omar Abdullah's Bearded Photo in her twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X