For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேவலமான அரசியல் என மம்தா ஆவேசம்.. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை புறக்கணித்தார்.. பரபரப்பு பின்னணி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் விழுந்தது முதல் ஓட்டை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்த நிலையில். அந்த போராட்டத்தில் தான் பங்கேற்க போவது இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி கூறுகையில் "காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கேவலமான அரசியலில் ஈடுபடுகிறார்கள். நான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், என்ஆர்சிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்.

Recommended Video

    Students in Mumbai held protests in support of JNU students

    காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மாநிலத்தில் செய்யும் கேவலமான அரசியல் காரணமாகவே, நான் அகில இந்திய நிலைபபாட்டிற்கு மாற காரணம். ஜனவரி 13 அன்று நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு மற்றும் என்ஆர்சிக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவு செய்துள்ளேன் (அன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரில் மம்தா பங்கேற்கிறார்).

     வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே முகமூடி மனிதர்கள் குறித்து தகவல் அளித்தோம்.. ஆயிஷ் கோஷ் வன்முறை நடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே முகமூடி மனிதர்கள் குறித்து தகவல் அளித்தோம்.. ஆயிஷ் கோஷ்

    இடசாரிகள் போராட்டம்

    இடசாரிகள் போராட்டம்

    டெல்லியில் நடைபெறும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களே, கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாததற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் நேற்று(புதன்கிழமை) மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக இனி அவர்களுடன் இணைந்து கூட்டத்தில் பங்கேற்பது சாத்தியமில்லை. நேற்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைத்த வேலைநிறுத்தத்தின் போது பேருந்துகள் பல சேதமடைந்தது, சிபிஎம் ஒரு சாலை முற்றுகையிட்டு மறியல் செய்து ஸ்தம்பிக்க வைத்தது.

    போராடுவேன்

    போராடுவேன்

    எனினும் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இந்த சட்டத்தையும் என்.ஆர்.சி யையும் வங்காளத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    சிறப்பு தீர்மானம்

    சிறப்பு தீர்மானம்

    சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சிபிஐஎம் மம்தாவையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்தது. இதற்கு மம்தா பானர்ஜி ஏற்கனவே தனது எதிர்ப்பைக் குரல் கொடுத்ததாகவும், இப்போது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக உணரவில்லை என்றும் கூறினார். அத்துடன் "சிஏஏவை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி நீங்கள் என்னிடம் சொல்லத் தேவையில்லை" என்று மம்தா ஆவேசம் அடைந்தார்.

    கதையையே மாற்றியது

    கதையையே மாற்றியது

    புதன்கிழமை, 24மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததற்காக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸை தாக்கினார். "அரசியல் இருப்பு இல்லாதவர்கள் வேலைநிறுத்தங்களை அழைக்கிறார்கள்," என்று மம்தா குறிப்பிட்டார், திரிணாமுல் தொழிலாளர்கள் மற்றும் இடது உறுப்பினர்களுக்கு இடையிலான வன்முறை மற்றும் மோதல்களுக்கு இடையே வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் மம்தா நேற்று குற்றம்சாட்டினார். நேற்று நடந்த மோதல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் ஓட்டை விழுந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் மம்தா கூட்டாக போராடும் முடிவை கைவிட்டுவிட்டார்.

    English summary
    Mamata Banerjee decided not to attend the anti-CAA and NRC meeting on January 13, due to congress and lefts parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X