For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்ப மை வைச்சுட்டா நவ.19 இடைத் தேர்தலில் பஞ்சாயத்து வராதா? மமதா காட்டம்

வங்கிகளில் பணம் எடுப்போருக்கு விரலில் மை வைக்க மமதா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: வங்கிகளில் தற்போது பணம் எடுக்க பொதுமக்களிடத்தில் மை வைத்துவிட்டால் நவம்பர் 19-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலின் போது வாக்காளர்கள் என்ன செய்வார்கள்? என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தைத் தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பணத்தைப் பெற முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Mamata slams Centre over indelible ink

இந்த நிலையில் ரூ4,500 க்கு வங்கிகளில் பணம் எடுக்கும்போது விரலில் மை வைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வரும் 19-ந் தேதியன்று இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இப்போது விரலில் மை வைத்தால் தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு சிக்கல் வராதா?

மத்திய அரசின் இந்த மை வைப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் என்ன சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
West Bengal CM Mamata Banerjee slams Centre over the indelible ink. Shle also asked there are by-elections on Nov 19; What'll the EC say about this decision to put indelible ink on prospective voters?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X