For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீட்டு நிறுவனத்திடம் பணம்பெற்றால் கட்சியில் இருந்து ராஜினாமா: மமதா பானர்ஜி

By Mathi
Google Oneindia Tamil News

Mamata
கொல்கத்தா: தமது கட்சியினர் யாராவது சீட்டு நிறுவனங்களிடம் இருந்து கட்சிக்காக பணம் பெற்றது தெரியவந்தால் உடனே கட்சியைவிட்டு விலகிவிடுவேன் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தை உலுக்கி வருகிறது சாரதா சீட்டு நிறுவன மோசடி விவகாரம். இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் சிக்கி சிறைக்குப் போயிருக்கிறார். இந்நிலையில் சீட்டு நிறுவனங்களிடம் இருந்து கட்சியினர் பணம் பெறக் கூடாது என்று மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, தொண்டர்களோ நிதி நிறுவனங்களில் இருந்து பணத்தைப் பெற்றால் தான் உடனடியாக கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்றும் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், யாராவது நிதி நிறுவனங்களில் இருந்து பணத்தைப் பெறுவது எனக்கு தெரிய வந்தால், உடனடியாக நான் கட்சியை விட்டு விலகி விடுவேன். பணம் தேவைப்பட்டால், பிச்சை எடுத்து கட்சியை நடத்துவோம். ஆனால் ஒரு போதும் நிதி நிறுவனத்தின் பணத்தைப் பெற்று கட்சி நடத்த மாட்டோம் என்றார்.

English summary
Days after tainted Trinamool MP Kunal Ghosh named her in Saradha chit fund scam, West Bengal Chief Minister Mamata Banerjee on Friday said none of the Trinamool party members were associated with chit funds. On Friday at extended general council meet of the party, Mamata said she will leave the party if any of the workers raise Funds for such companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X