For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க காலாவதி ஆயிட்டீங்க.. உங்களுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்.. மமதா பானர்ஜி அதிரடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: ஃபனி புயல் குறித்து பேசுவதற்காக தனது அழைப்பை மம்தா பானர்ஜி ஏற்கவில்லை என பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தாம்லுக் பகுதியில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஸ்பீட் பிரேக்கர் தீதி, ஃபனி புயல் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிய மம்தாவுக்கு போன் செய்து பேச முயன்றேன். ஆனால் அவர் ஆணவம் காரணமாக என்னிடம் பேசவில்லை.

போங்க.. எங்க அப்பா மாதிரி ஓட்டு போடுங்க... தோனி மகள் வேண்டுகோள்..வைரல் வீடியோ போங்க.. எங்க அப்பா மாதிரி ஓட்டு போடுங்க... தோனி மகள் வேண்டுகோள்..வைரல் வீடியோ

தடை

தடை

அவர் திருப்பி எனக்கு போன் செய்வார் என நினைத்தேன். ஆனால் அவர் செய்யவில்லை. மேற்கு வங்க மக்கள் மீதான கவலையில்தான் அவரிடம் பேச முற்பட்டேன். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார். உங்கள் மீது மம்தாவுக்கு எத்தனை அக்கறை. அவரது இந்த மனப்பான்மைதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன என்றார் மோடி.

மூத்த அதிகாரிகள்

மூத்த அதிகாரிகள்

ஆனால் இந்த குற்றச்சாட்டை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா கூறுகையில் முதல்வர் இல்லாமல் தலைமை செயலாளர்கள், மூத்த அதிகாரிகளை எப்படி ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கலாம்.

பதில் அளிக்கவில்லை

பதில் அளிக்கவில்லை

மேற்கு வங்கத்தில் இதுபோன்ற நாடகத்தை நடத்தாதீர்கள். மிஸ்டர் காலாவதியான பிரதமர் நீங்கள் பிரதமராக இருக்க தகுதியற்றவர். உங்களுடைய அனுதாபம் எங்களுக்கு தேவையில்லை. ஃபனி புயல் குறித்து போன் செய்த பிரதமருக்கு நான் பதில் அளிக்கவில்லை.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

காலாவதியான பிரதமரிடம் நான் எதையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. நாங்கள் என்ன அவருக்கு பணியாட்களா, நீங்கள் என்ன ஆலோசனை கூட்டம் நடத்தவா இங்கு வந்தீர்கள். உங்கள் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளத்தானே வந்தீர்கள் என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Banerjee said Modi was doing drama in Bengal for social media publicity and the state does not want his sympathy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X