For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் எம்எல்ஏவை பதவி விட்டு நீக்கி உள்ளனர்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மம்தாவுக்கு அடுத்தடுத்த ஷாக் தந்து வருகிறார்கள் சொந்த கட்சிக்காரர்கள்.. வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த, அடுத்த நிமிஷமே இன்னொரு பெண் எம்எல்ஏ பைசாலி டால்மியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸே அறிவித்துவிட்டது.. இதற்கு காரணம் பைசாலியும், கட்சி தலைமைக்கு எதிராக பேசி வந்தாராம்.

மேற்கு வங்கத்தில் விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. ஆட்சியை தக்க வைத்து கொள்ள மம்தா பானர்ஜியும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் முயன்று வருகிறார்கள்.. இதில் பாஜக கொஞ்சம் கூடுதலாக இறங்கி வேலை பார்த்து வருகிறது.

அதன் ஒருபகுதியாகத்தான், திரிணாமுல் தரப்பில் இருந்து ஒவ்வொருவரையும் தங்கள் பக்கம் இழுத்து கொண்டு வருகிறது.

அதிரடி

அதிரடி

பாஜகவின் பலவித யுக்தியை அசால்ட்டாக முறியடிக்க கூடியவர் மம்தாபானர்ஜி.. 34 வருஷமாக, ஆட்சியில் இருந்த இடதுசாரிகளையே, அகற்றி விட்டு திரிணாமுல் காங்கிரஸை ஆட்சியில் அமர வைத்தவர்.,. அப்பேர்ப்பட்ட மம்தா, இந்த முறை சற்று கலங்கி போயிருக்கிறார் என்றால், பாஜகவின் ஆளை இழுக்கும் வேலையால்தான்..!

விலகல்

விலகல்

40க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்... இதுவரை 3 அமைச்சர்கள், 15 எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டனர்.. அந்த வகையில், வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜியும் பதவியை ராஜினாமா செய்தார்.. அத்துடன் அவர் சும்மா போகவில்லை.. மம்தா மீது ஒரு லிஸ்ட் போட்டு புகார் சொல்லி, கண்ணீர் மல்க பேட்டி தந்துவிட்டு போனார்.

 பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

ரஜீப் பானர்ஜி விலகிய அடுத்த சில மணி நேரங்களிலேயே பெண் எம்எல்ஏவான பைசாலி டால்மியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.. கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இதற்கு காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவிற்கு எதிராகவும், பிரஷாந்த் கிஷோர் தொடர்பாகவும் சில தினங்களுக்கு முன்பு எதிரான கருத்தை பகிரங்கமாக சொன்னாராம்.

நீக்கம்

நீக்கம்

அதனாலேயே, அதிரடியை காட்டி உள்ளது திரிணாமுல்.. ஆனால், இதை பற்றி எம்எல்ஏ பைசாலி டால்மியா சொல்லும்போது, "நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றி எந்த கடிதமும் எனக்கு கிடைக்கவில்லை.. சேனல் பார்த்துதான் எனக்கு நியூஸ் தெரிந்தது.. கட்சியின் இயக்க முறைமை பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை... பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக நான் அரசியலில் சேர்ந்தேன், இனியும் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

 துணிச்சல்

துணிச்சல்

ஆனால், மம்தாவின் துணிச்சலாகவே இது பார்க்கப்படுகிறது.. காரணம், பாஜக ஒரு பக்கம், ஆட்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கினாலும், தங்களுக்கு எதிரானவர்கள் யார் என்பதை மோப்பம் பிடித்து, சம்பந்தப்பட்டவர்களை கட்சியை விட்டு தூக்கி வருகிறார் மம்தா.. இப்படித்தான் தன் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு போன சுவேந்து தொகுதியிலேயே இந்த முறை போட்டியிட போவதாக கெத்தாக அறிவித்து துணிச்சலின் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார் மம்தா!

English summary
Mamta Banerjees Trinamool Congress MLA Baishali Dalmiya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X