உத்தரகண்ட் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை முதுகில் சுமந்து காப்பாற்றிய வீரப்பெண் மம்தா ராவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உத்தரகண்ட் மாநிலத்தில் கடும் வெள்ள பாதிப்பின்போது தனது உயிரை பற்றி கவலைப்படாமல் ஏராளமான உயிர்களை காப்பாற்றிய பெருமை மம்தா ராவத்துக்கு உண்டு.

உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற சுற்றுலா பயணிகள் பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக கடந்த ஜூன் 2013-ஆம் ஆண்டில் கடும் வெள்ளம் பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டார்.

அந்த வெள்ளப்பாதிப்பின்போது கார்வால் இமயமலை பகுதியில் உத்தரகாசியில் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வீடில்லாமல் தவித்து வந்தனர்.

 மலையேற்றம்

மலையேற்றம்

பன்கோலியை சேர்ந்த மம்தா பயிற்சி பெற்ற மலையேற்ற வீராங்கணை. அவர் படித்த நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் மம்தாவும் இடம்பெற்றிருந்தார். அவர் வீட்டை விட்டு சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

 முதுகில் சுமந்தார்

முதுகில் சுமந்தார்

நடுத்தர வயது கொண்ட சுயநினைவில்லாத பெண் பயணி ஒருவரை தனது முதுகில் சுமந்து கொண்டு மலைப்பாங்கான பகுதியில் கிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவு வரை அழைத்து செல்லப்பட்டு அந்த பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் மம்தாவின் வீடு நீரில் அடித்து செல்லப்பட்டது. இருந்தும் அவர் மக்களை மீட்பதிலேயே குறியாக இருந்தார்.

 வீடு வேண்டாம்

வீடு வேண்டாம்

இவரது வீடு அடித்து செல்லப்பட்டதால் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனினும் பழைய பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தங்கள் கிராம மக்களுக்கு கயிறு மூலம் கட்டப்பட்ட பாலங்களை அமைத்து தர உதவி கேட்டார்.

 ஏழ்மையான குடும்பம்

ஏழ்மையான குடும்பம்

மம்தாவின் குடும்பம் ஏழ்மையானது. இவரது வீட்டில் இவர் மட்டுமே சம்பாதித்து வந்தார். பள்ளி படிப்பை பாதியிலேயே முடித்த மம்தாவுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு மலையேற மட்டுமே தெரியும். முறையாக மலையேற்ற பயிற்சியை முடித்த அவர் ரூ.5000 வரை சம்பாதிக்கத் தொடங்கினார்.

 சுயநலம் காணாமல்

சுயநலம் காணாமல்

ஆண்களே செய்ய அஞ்சும் மீட்பு பணியை பெண்ணாக இருந்து தனது வீட்டை பற்றியும், தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் பிறரது உயிர்களை காப்பாற்றிய மம்தா உண்மையிலேயே சாதனை நாயகிதான் என்பதில் சந்தேகமே இல்லைங்க.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mamta Rawat who is a trained mountaineer saves many lives when heavy flood occurs in Uttarkhand. She is an unsung hero.
Please Wait while comments are loading...