For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருமகனை எப்படியாவது முதல்வராக்கியே தீரணும்.. துடிக்கும் மம்தா.. அமித்ஷா கடும் தாக்கு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: தனது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியை அடுத்த முதல்வராக்குவது குறித்தே மம்தா பானர்ஜி சதா சர்வகாலமும் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார் என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் தீதி இதுதான் ஆரம்பம். பொறுத்திருந்து பாருங்கள், மேற்கு வங்கத்தில் ஒரு சுனாமி உருவாகும். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.

காங்கிரஸுக்கு 30, கம்யூனிஸ்ட்டுக்கு 27, தீதிக்கு 10.. பாஜகவுக்கும் 5 ஆண்டுகள் தாங்க.. அமித்ஷாகாங்கிரஸுக்கு 30, கம்யூனிஸ்ட்டுக்கு 27, தீதிக்கு 10.. பாஜகவுக்கும் 5 ஆண்டுகள் தாங்க.. அமித்ஷா

இணைத்தல்

இணைத்தல்

200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று அடுத்து ஆட்சியை அமைக்கும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வன்முறை, மிரட்டல் ஆகியவற்றால் எதையும் சாதிக்க முடியாது. நாங்கள் அவரது கட்சியின் தலைவர்களை பாஜகவில் இணைத்துக் கொள்கிறோம் என மம்தா குறை கூறுகிறார்.

திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ்

நான் அவரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், அவர் இதற்கு முன்னால் இருந்த கட்சி எது, காங்கிரஸ் கட்சியிலிருந்து கொண்டு ஆட்களை அங்கிருந்து பிரித்துக் கொண்டு வந்து திரிணமூல் காங்கிரஸை உருவாக்கினார். ஆயுஷ்மான் பாரத்தை மம்தா மேற்கு வங்கத்தில் வரவிடாமல் தடுத்துள்ளார். இது மட்டுமல்ல மத்திய அரசின் 80 நலத்திட்டங்களை அவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

முதல்வராக்க விருப்பம்

முதல்வராக்க விருப்பம்

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகன் அபிஷேக் குறித்த கவலையே பெருங்கவலையாகிவிட்டது. அபிஷேக்கை எப்படியாவது அடுத்த முதல்வராக்கி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார் மம்தா என்றார்.

சுவேந்து அதிகாரி

சுவேந்து அதிகாரி

பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி சுவேந்து அதிகாரி கூறுகையில், கட்சியில் எனக்கு மரியாதை இல்லை. மரியாதை இல்லாத இடத்தில் என்னால் எப்படி இருக்க முடியும்? எனது சொந்த தாய் மற்றும் தாய்நாட்டை தவிர வேறு யாரையும் நான் அம்மா என அழைக்க போவதில்லை. நாம் முதலில் இந்தியர்கள், பிறகுதான் வங்கத்தவர்கள். நாளையிலிருந்து பாஜகவுக்காக உழைக்க தொடங்குகிறேன் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

English summary
Union Minister Amit Shah says that Mamta wants her Nephew to be next CM of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X