For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பெருமாள்" பெயரைப் பயன்படுத்தி ரூ. 20,000 பணத்தை மோசடி செய்து "நாமம்" போட்டவர் கைது!

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் பெருமாள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சமந்த். இவர் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு செல்வார். அப்போது திருப்பதியை சேர்ந்த முரளி என்பவர் அறிமுகமானார். அவர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பார். அதற்காக தனியாக பணம் பெற்றுக் கொள்வார்.

Man chated a gang as a name of special dharshan

இந்த நிலையில் சமந்த் தனது நண்பர்கள் 3 பேருடன் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டார். இதற்காக 2 மாதம் முன்பே திருப்பதி முரளியிடம் பேசினார். அவர் 4 பேருக்கும் ரூபாய் 20 ஆயிரம் ஆகும் என்றார்.

அதற்குரிய பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து அவரது வங்கி கணக்குக்கு அனுப்பினார். அதன்பிறகு முரளியை சமந்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் மோசம் போனதை உணர்ந்த சமந்த் நேற்று திருப்பதி வந்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முரளிக்கு பணம் கொடுத்த ஆதாரங்களை காட்டினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை தேடி வருகிறார்கள்.

English summary
Man cheated a group for Tirupathi dharshan, police searching for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X