For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீண்டி தொல்லை கொடுத்த "விராட் டோணி"– புரட்டி எடுத்த மாணவிகள்

Google Oneindia Tamil News

செந்த்வா, ம.பி.: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி பொது இடத்தில் வைத்து வாலிபருக்கு மற்ற பெண்களை விட்டு தர்மஅடி கொடுத்த வைத்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம் செந்த்வா பகுதியை சேர்ந்த வாலிபர் விராட் டோணி.

விராட் டோணி அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Man forced to bend over, smacked after he harasses group of schoolgirls

மாணவிகளுக்கு இம்சை:

மாணவிகளின் அருகே சென்று தொல்லை கொடுத்தல், விசில் அடித்தல் சாடையாக கூப்பிடுதல் என பல்வேறு இம்சைகளை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்ஸ்பெக்டரிடம் புகார்:

இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளான மாணவிகள் எத்தனைமுறை எச்சரித்தும் விராட் டோணி கேட்கவில்லை. பெரும் சிரமத்திற்கு உள்ளான மாணவிகள் அப்பகுதியை சேர்ந்த பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோனிகா சிங்கிடம் எடுத்துக் கூறினர்.

பெண்களால் தர்ம அடி:

பெண் போலீசாரிடம் அவர்கள் புகார் கொடுத்தனர். உடனடியாக டோணியை பிடித்த பெண் போலீஸ் அதிகாரி மோனிகா சிங் பொது இடத்தில் அவமானம் அடைய செய்யும் விதமாக பெண்களை வைத்து தர்மஅடி கொடுக்க வைத்தார். புகார் தெரிவித்த பெண்களை வைத்தும் முதுகில் அடிக்க வைத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு:

இதனால் அவமானமடைந்த வாலிபர் விராட் டோணி மாவட்ட நீதிபதியை அணுகி புகார் கூறி மனு அளித்தார்.

வாலிபருக்கு அவமானம்:

அந்த மனுவில் "பொதுமக்கள் முன்னே வைத்து என்ன தண்டித்தது மிகவும் அவமானமானதாகும். என்னை கோர்ட்டிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். பின்னர் எனக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கவேண்டும்" என்று விராட் டோணி கூறினார்.

அடி தேவைதான் தம்பி:

இதை விசாரித்த நீதிபதி அவருடைய குற்றச்சாட்டை ஏற்க மறுத்துவிட்டார். டோணிக்கு அடிதேவைதான் பொது இடத்தில் வைத்து பள்ளி மாணவிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார். அவர் பொது இடத்தில் வைத்து தண்டிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் சரியானதே என்று நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
A man, who harassed a group of schoolgirls with catcalls and wolf whistles in Sendhwa in Madhya Pradesh, was given a fitting reply. The girls first approached a policewoman, who held the culprit asking him to bend while they smacked his backside in public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X