For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தவருக்கு கொரோனா.. அச்சத்தில் திருமலை!

Google Oneindia Tamil News

அமராவதி: 70 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நபருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவரை காணாததால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கோயில்களும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மத்திய அரசு வழங்கியது. அது போல் கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் கோயில்களை திறக்கவும் அனுமதி அளித்தது.

வளைகாப்புக்கு வந்தவர் கொரோனாவால் பலி.. சட்டவிரோதமாக புதுவை வருபவர்களால் வேகமெடுக்கும் கொரோனா வளைகாப்புக்கு வந்தவர் கொரோனாவால் பலி.. சட்டவிரோதமாக புதுவை வருபவர்களால் வேகமெடுக்கும் கொரோனா

ஏழுமலையான் கோயில்

ஏழுமலையான் கோயில்

இதையடுத்து திருப்பதி ஏழுமலையான கோயில் கடந்த 8-ஆம் தேதி திறக்கப்பட்டது. அப்போது முதல் 3 நாட்கள், அதாவது 10-ஆம் தேதி வரை தேவஸ்தான அதிகாரிகள், மற்றும் உள்ளூர்வாசிகள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 11 ஆம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகளை செய்தது தேவஸ்தானம்.

சென்னை

சென்னை

இந்த நிலையில் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் 32 வயது இளைஞர். இவர் சென்னையில் உள்ள தனியார் டிவி சேனலில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரு மாதங்களாக திருமலையில் இருந்த நிலையில் அண்மையில் சென்னைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

செல்போன்

செல்போன்

இவர் கடந்த 14-ஆம் தேதி திருப்பதியிலிருந்து திருமலைக்கு சென்ற போது அலிபிரி சோதனை சாவடியில் கொரோனா சோதனைக்காக ரத்த மாதிரிகளை கொடுத்திருந்தார். இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து அவருக்கு செல்போனில் தகவலும் அனுப்பப்பட்டது.

திருப்பதி கோயில்

திருப்பதி கோயில்

சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரை காணவில்லை. அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த ஜூன் 10-ஆம் தேதியும் அதற்கு பின்னரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதனால் அன்றைய தினமும் அதன் பின்னரும் திருப்பதி கோயிலுக்கு வந்த பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.

English summary
Man who darshaned in Tirumala Tirupati Balaji temple test corona positive and he goes missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X