For Daily Alerts
Just In
ஏடிஎம் மிஷினில் காசுக்கு பதில் 'கரண்ட்' வந்த விபரீதம்.. கார்டு சொருகிய வாலிபர் காயம்!
அலகாபாத்: ஏடிஎம் மிஷினில் கார்டை நுழைத்தபோது ஷாக் அடித்து இளைஞர் காயமடைந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருகேயுள்ள ஜன்காய் நகரில் நடந்துள்ளது.
ஜன்காய் நகரை சேர்ந்த 25 வயது இளைஞர் பிரிஜேஷ் குமார் யாதவ் என்பவர், நேற்று, சாலையோரம் இருந்த ஒரு ஏடிஎம் மையத்துக்குள் பணமெடுக்க சென்றுள்ளார். கன மழை காரணமாக, பிரிஜேஷ் நனைந்தபடியே உள்ளே சென்றுள்ளார்.

ஏடிஎம் மெஷினுக்குள் தனது டெபிட் கார்டை நுழைத்தபோது, அவரது உடலில் மின்சார ஷாக் அடித்துள்ளது. இதனால் பயந்து போன பிரிஜேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. திகம்பர் குஸ்வகா, அந்த ஏடிஎம் மையம் அமைந்துள்ள கட்டிடம் மிக பழமையானது. வங்கி அதிகாரிகளிடம் சொல்லி, மின்சார இணைப்புகள் ரிப்பேர் செய்ய உத்தரவிடப்படும் என்றார்.