For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய் வீட்டிலிருந்து 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    10 நிமிடம் லேட்டாக வந்ததால் தலாக் கூறிய கணவர்- வீடியோ

    எட்டா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்த மனைவியை கணவர் விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முத்தலாகிற்கு எதிராக லோக்சபையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு கூறும் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் எட்டாவில் பெண் ஒருவர் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட பாட்டியை நலம் விசாரிக்க சென்றிருந்த அவரை காணாமல் கணவர் போன் செய்துள்ளார்.

    உத்தரவு

    உத்தரவு

    அப்போது தாய் வீட்டில் இருப்பதாக கூறிய மனைவியை இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு வர வேண்டும் என கணவர் உத்தரவிட்டதற்கு அவரும் சரி என அடித்து பிடித்து கிளம்பினார்.

    பெண் அதிர்ச்சி

    பெண் அதிர்ச்சி

    அப்படியும் 10 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் சகோதரருக்கு போன் செய்து முத்தலாக் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

    சிசு கலைந்தது

    சிசு கலைந்தது

    இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் திருமணத்தின் போது எனது பெற்றோர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் என் கணவர் வீட்டார் என்னை பலமுறை தாக்கியுள்ளனர். இது போல் என்னை அடித்ததால் எனது வயிற்றில் வளர்ந்த சிசு கலைந்து விட்டது.

    அரசுக்கு கோரிக்கை

    அரசுக்கு கோரிக்கை

    எனது குடும்பம் வறுமையில் வாடுவதால் கணவர் வீட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது. இந்த ஆத்திரத்தில் வெறும் 10 நிமிடம் தாமதமாக வந்த என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார். இந்த விவகாரத்தில் அரசு எனக்கு உதவ வேண்டும்.

    கண்ணீர் விட்ட பெண்

    கண்ணீர் விட்ட பெண்

    எனக்கு நீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் எனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    English summary
    Uttar Pradesh man gives triple talaq to his wife for reaching home 10 minutes late from her mother's home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X