For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் பயங்கரம்.. பரூக் அப்துல்லா வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் முயற்சி.. ஒருவர் சுட்டுக்கொலை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் முன்னாள் முதல்வர் வீட்டில் மர்ம நபர் தாக்குதல் நடத்த முயற்சி- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் தாக்குதல் நடத்த நடந்த முயற்சியை முறியடித்த பாதுகாவலர்கள், சந்தேகிக்கும் நபரை சுட்டுக் கொன்றனர்.

    ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று கார் ஒன்றில் ஒரு நபர், பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்தும் நிறுத்தாமல் உள்ளே நுழைந்ததால் பாதுகாப்பு போலீசார், சுட ஆரம்பித்தனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    Man gunned down by security personnel at Farooq Abdullahs house

    தேசிய மாநாட்டு கட்சி தலைவரான, பரூக் அப்துல்லா, காஷ்மீரின் முன்னாள் முதல்வர். மத்திய அமைச்சராக இருந்தவர். தற்போது எம்.பியாக உள்ளார்.

    இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா, அரசியல் எதிரிகள் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    பருக் அப்துல்லா இல்லத்தில் சமீபத்தில் இதுபோன்ற எந்த தாக்குதல் சம்பவும் நடைபெற்றது இல்லை. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    "முக்கிய கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஊடுருவலாளர், பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி இதில் காயமடைந்துள்ளார். வீட்டு வளாகத்திலுள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, ஊடுருவல்காரரை சுட்டு கொன்றனர்" என்று, ஜம்மு காஷ்மீர் எஸ்எஸ்பி, விவேக் குப்தா தெரிவித்தார்.

    ஜம்மு மண்டல ஐஜி ஜிங் ஜம்வால் கூறுகையில், "அத்துமீறி நுழைந்தவர் பெயர் முர்பாஷ் ஷா என்றும், அவர் பூஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

    English summary
    Man gunned down by security personnel when he was trying to enter former Jammu and Kashmir Chief Minister Farooq Abdullah's residence in a car, reports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X