For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எபோலா பற்றி மக்களுக்கு பீதி வேண்டாம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வேண்டுகோள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: எபோலா நோய் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

சிகிச்சைக்கு உள்ளாகிவரும் அந்த நபருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறது. இதற்காக மக்கள் யாரு பீதி அடைய தேவையில்லை.

Man recovering from Ebola in Delhi: 'No Need to Panic', says health Minister

மேலும், இது மிகவும் ஆபத்து நிறைந்த நோய் என்றாலும், அவர் எபோலா நோய்க்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர், இந்தியாவுக்கு வந்த பிறகு, தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கபப்ட்டுள்ளார். அந்த இளைஞர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். நிலைமை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளோம். அதனால் யாரும் பீதி அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Hours after it was reported that an Indian national who was cured of Ebola in Liberia has been quarantined in Delhi, Union Health Minister JP Nadda said that the government is cautious and there is no need to panic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X