For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லைசென்ஸ் வேணுமா.. ரைட்ல பாருங்க ஆபிசர்.. அட, ஷாவோட ஐடியா சூப்பராத்தான் இருக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Which country have higher amount of penalty for traffic violation

    காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில், போக்குவரத்து போலீசாரின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு மனிதர், தனது தலைக்கவசத்திலேயே லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை தனது ஒட்டிக்கொண்டு சுற்றுகிறார்.

    நமது நாட்டில் வாகன ஓட்டிகளின் பாடு பெரும்பாடு தான். குண்டும் குழியுமான சாலைகளில், போக்குவரத்து நெருக்கடியில் வாகனத்தை ஓட்டிக் கொண்டு காலையில் பீக் ஹவரில் சரியான நேரத்திற்கு அலுவலகம் போய் சேருவதற்குள் ஒருவிழயாகிவிடுவார்கள்.

    man sticks vehicle documents on helmet to avoid fines

    இதில் போக்குவரத்து போலீசாரின் கெடுபிடியும் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான் அன்றைய பொழுது. ஹெல்மெட் போட்டிருக்கிறாயா, லைசென்ஸை காட்டு, ஆர்சி புக்கை எடு, இன்சுரென்ஸ் எங்கே குடாய்ந்துவிடுவார்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் நம் கதி அதோகதி தான். அவர்களிடம் இருந்து தப்பித்து போவதற்குள் ஒருவழியாகிவிடும்.

    இந்த தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக குஜராஜ் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷா என்பவர் சூப்பர் ஐடியாவை கையாண்டு வருகிறார். தனது தலைக்கவசத்திலேயே, லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சுரென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை ஒட்டி வைத்திருக்கிறார். போக்குவரத்து போலீசார் பிடித்தால், தனது ஹெல்மெட்டை மட்டும் கழட்டி காண்பித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார் ஷா.

    இதன் காரணமாகவே குஜராத் முழுவதும் பிரபலமாகிவிட்டா மனிதர். இவரை எல்லோரும் இப்போது ஹெல்மெட் மனிதர் என்று அழைக்கின்றனர். இதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் ஷா, " நான் பைக்கை எடுக்கும் போது முதலில் அணிவது ஹெல்மெட் தான். அதனால் தான் அதில் எல்லா ஆவணங்களையும் ஒட்டி வைத்துள்ளேன். எனவே நான் இதுவரை பைன் கட்டியதே இல்லை", என்கிறார்.

    ஷாவை போலவே நாமும் செய்தால் நம்மூர் போலீசிடம் இருந்து ஈஸியாக தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு ஒழக்கமான குடிமகனாக நடந்து கொள்ளவும் முடியும்.

    English summary
    In Vadodara, Gujarat a man named Shah.R, has pasted his driving license, RC book, insurance and other documents on his helmet. He Says,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X