For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் 15 நாட்களுக்கு மங்கள்யானில் இருந்து தகவல் எதுவும் வராது!

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: செவ்வாய் கிரகத்தை சூரியன் மறைக்க உள்ளதால் நாளையில் இருந்து 15 நாட்களுக்கு மங்கள்யான் விண்கலத்தில் இருந்து தகவல் எதையும் பெற முடியாது.

குறைந்த செலவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மங்கள்யான் விண்கலம். கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதில் இருந்து மங்கள்யான் செவ்வாய் கிரகம் குறித்து தகவல்களை அனுப்பி வருகிறது.

Mangalyaan mission

இந்நிலையில் சூரியன் செவ்வாய் கிரகத்தை மறைக்க உள்ளதால் நாளையில் இருந்து 15 நாட்களுக்கு அதாவது வரும் 22ம் தேதி வரை மங்கள்யானில் இருந்து தகவல் எதுவும் கிடைக்காது. இந்த 15 நாட்களும் மங்கள்யானை தொடர்பு கொள்ள முடியாது என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மங்கள்யான் கடந்த மார்ச் மாதம் தனது ஆய்வை முடித்து திரும்ப வேண்டியது. ஆனால் விண்கலத்தில் கூடுதல் எரிபொருள் இருப்பதால் அதன் ஆய்வு காலத்தை 6 மாதங்கள் நீட்டித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் ஆசிய நாடு இந்தியா. மேலும் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் மங்கள்யான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Starting Monday, the country's low-cost Mars mission that is in a rendezvous with the red planet for an extended period will enter the "blackout" phase snapping communication with the satellite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X