For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைதிக்கின் பாகிஸ்தான் பயணம்.. விசாரிக்க கோருகிறார் மணிசங்கர் அய்யர்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மூத்த பத்திரிகையாளர் வைதிக்கின் பாகிஸ்தான் பயணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mani Shankar Aiyar demand probe on Vidik's Pak Visit

இந்தியாவில் இருந்து பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று பாகிஸ்தானில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டது. இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், சல்மான் குர்ஷித் மற்றும் பத்திரிகையாளர்கள் வைதிக், சித்தார்த் வரதராஜன், பர்கா தத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்குக்கு சென்ற போதுதான் ஜமா உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத்தை வைதிக் சந்தித்து பேசி பெரும் சர்ச்சையாகிப் போனது. இது குறித்து கருத்து தெரிவித்த மணிசங்கர் அய்யர், நான் ஒரு எம்.பி. என்கிற வகையில் சார்க் நாடுகளுக்கான விசா வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு எந்த அடிப்படையில் எத்தனை நாட்களுக்கான விசா வழங்கப்பட்டது என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.

அதேபோல் வைதிக் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்கள் என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்கிற முறையில் இந்த விசாரணையை நடத்த கோருகிறேன் என்றார்,

English summary
The Senior Congress leader Mani Shankar Aiyar gave an elaborate detail of the visit including the number of visiting delegation, dates of return and who all stayed back in Pakistan including Ved Pratap Vaidik. While political parties have demanded a probe into the issue, being a Congress man Aiyar also resonated his party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X