For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பங்களாவை காலி செய்துவிட்டு கட்சி அலுவலகத்தில் குடியேறினார் மாணிக் சர்கார்

அரசு பங்களாவை காலி செய்த மாணிக் சர்கார் சிபிஎம் அலுவலகத்தில் குடியேறினார்.

By Mathi
Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மனைவியுடன் குடியேறினார்.

திரிபுராவில் 25 ஆண்டுகாலம் இடதுசாரிகள் ஆட்சி இருந்து வந்தது. எளிமையின் சிகரமாக மாணிக் சர்க்கார் ஆட்சி செய்து வந்தார்.

Manik sarkar lives in CPM office

சொந்த வீடு கூட தமக்கு இல்லை என பகிரங்கமாகவே மாணிக் சர்க்கார் தெரிவித்திருந்தார். அவரது மனைவி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் ஆட்சியை இழந்தனர். இதனையடுத்து முதல்வர் பதவியை மாணிக் சர்க்கார் ராஜினாமா செய்தார்.

தேர்தலில் வென்று இருப்பதால் மாணிக் சர்க்காருக்கு எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு பங்களாவை காலி செய்த மாணிக் சர்க்கார் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறினார்.

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மாடியில் 2 அறைகள் கொண்ட ப்ளாட்டில் மனைவியுடன் தற்போது மாணிக் சர்க்கார் வசித்து வருகிறார்.

English summary
Former Tripura Chief Minister Manik Sarkar is now living in a flat above the CPM party office at Agartala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X