For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை... கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

கொலை வழக்கில் மணிப்பூர் மாநில முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

இம்பால்: கொலை வழக்கில் மணிப்பூர் மாநில முதல்வரின் மகனுக்க 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விசாரணை நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரன் சிங்கின் மகன் அஜய் மீட்டாய். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு, ரோஜர் என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்தார்.

Manipur Chief Minister son gets 5 years jail

அப்போது, மற்றொரு வந்து கொண்டிருந்த அஜய் மீட்டாய், ரோஜரின் காரை முந்திச்செல்ல முயன்றார். ஆனால் ரோஜர் காருக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் மீட்டாய் ரோஜரை துப்பாக்கியால் சுட்டத்தில் ரோஜர் உயிரிழந்தார். இந்த வழக்கு மணிப்பூர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், இந்த வழக்கு விசாரனை உரிய முறையில் நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்ப ரோஜரின் தாயார் ஐரோம் சித்ரா தேவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை மே 21 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் இன்றுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் அஜய் மீட்டாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்ப்பட்டுள்ளது. கொலை வழக்கில் அஜய் மீட்டாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
The son of Manipur Chief Minister has been sentenced to 5 years jail for murder. The Manipur Court has issued a verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X