For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையின் பதற்றம்… மனோகர் பாரிக்கர் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் முப்படை தளபதிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. யூரி தாக்கலுக்கு பின்னர் தொடர்ந்து பதற்றம் உருவாகியுள்ள எல்லைப் பகுதியில் ராணுவ தளபதி தல்பீர் சிங், விமானப் படைத் தளபதி அரூப் ராஹா கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோருடன் மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Manokar parrikar, Army chief in emergency meet

இந்த ஆலோசனையில் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஏற்கனவே பலத்த பாதுகாப்பு இருந்த போதிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எப்படி தாக்குதல் நடத்த முடிந்தது என்பது பற்றி எல்லாம் தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவதை தடுக்க கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Defence Minister Manokar Parrikar holds emergency meeting with Army chief Dalbir Singh to review our border security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X